பாடல் #42994
மனசின் உள்ளே ஓர்
🔤 Manasin Ullae Or
🎙 Bro. கிபிட்ஸ்ன் துரை • 💿 தூங்க இரவுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனசின் உள்ளே ஓர் ஓசை பேசுதோ ? வாழ்வின் கசப்பை மீண்டும் நினைக்குதோ ? மறந்திட என்றும் மறக்க மறுக்குதோ? இயேசுவை நெஞ்சம் உதறி தள்ளுதோ ? மனசே…(5) அலையாதே ! மனசே சிதையாதே! ஓஓஓ…… வாழ்க்கை என்பதிலே நிறைவேறா விருப்பம் ஆயிரம் இருக்கும் இமைக்கும் பொழுதினிலே நிலைமாறும்! நிறைவேறும் ! இராஜாவின் மடியில் விளையாடும் அழகு செல்லபிள்ளை எல்லாம் சரியாகும் விளையாடு மகிழ்வோடு காத்திருந்த நேரம் மாறி பூக்கும் நேரம் வரும் நீ பூத்து காய்த்து கனி கொடுத்து வாழ்க்கை மாறி விடும் உனை பார்த்து நகைத்த உறவுகள் எல்லாம் மீண்டும் கூட வரும் நீ நீதியின் வாழ்க்கை வாழ்ந்தவன் என்று ஊரே பேரு சொல்லும் மனசே .. அலையாதே ! மனசே .. கலங்காதே ! மனசே .. திகையாதே ! மனசே .. சிதறாதே ! …………(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manasin Ullae Or Osai Paesutho ? Vaazhvin Kasappai Meentum Ninaikkutho ? Maranthida Enrum Marakka Marukkutho? Yesuvai Nenjjam Udhari Thallutho ? Manasae…(5) Alaiyaathae ! Manasae Sithaiyaathae! Ooo…… Vaazhkkai Enbathilae Niraivaeraa Viruppam Aayiram Irukkum Imaikkum Pozhuthinilae Nilaimaarum! Niraivaerum ! Iraajaavin Matiyil Vilaiyaatum Azhaku Sellapillai Ellaam Sariyaakum Vilaiyaatu Makizhvotu Kaatthirundha Naeram Maari Pookkum Naeram Varum Nee Pootthu Kaaytthu Kani Kotutthu Vaazhkkai Maari Vitum Unai Paartthu Nakaittha Uravugal Ellaam Meentum Kooda Varum Nee Neethiyin Vaazhkkai Vaazhndhavan Enru Oorae Paeru Sollum Manasae .. Alaiyaathae ! Manasae .. Kalangkaathae ! Manasae .. Thikaiyaathae ! Manasae .. Sidharaathae ! …………(2)