பாடல் #42637
நம்பிக்கையின் தேவனே
🔤 Nampikkaiyin Devanae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பிக்கையின் தேவனே நான் நம்பும் தெய்வமே என்னில் வாழும் இயேசுவே உம்மைத்தான் நம்புகிறேன் -2 எந்த நிலைமையிலும் என் மறுமையிலும் உம்மையே சார்ந்திருப்பேன் -2 1. நான் தவறும் போதெல்லாம் தவழும் பிள்ளையென மன்னித்து தோளில் சுமந்தவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும் 2. என் வியாதியின் படுக்கையிலே என்னைத் தேடி வந்தவரே உம் தழும்புகளால் சுகம் தந்தவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும் 3. நான் கலங்கும் போதெல்லாம் என் கண்ணீர் துடைத்தவரே என் பாரங்கள் ஏற்றுக்கொண்டவரே உம்மைத்தவிர உம்மைத்தவிர யாரை நம்புவேன் யாரைத் தேடுவேன் - எந்த நிலைமையிலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampikkaiyin Devanae Naan Nampum Theyvamae Ennil Vaazhum Yesuvae Ummaitthaan Nampukiraen -2 Endha Nilaimaiyilum En Marumaiyilum Ummaiyae Saarnthiruppaen -2 1. Naan Thavarum Pothellaam Thavazhum Pillaiyena Mannitthu Tholil Sumandhavarae Ummaitthavira Ummaitthavira Yaarai Nampuvaen Yaaraith Thaetuvaen - Endha Nilaimaiyilum 2. En Viyaathiyin Patukkaiyilae Ennaith Thaeti Vandhavarae Um Thazhumpugalaal Sugam Thandhavarae Ummaitthavira Ummaitthavira Yaarai Nampuvaen Yaaraith Thaetuvaen - Endha Nilaimaiyilum 3. Naan Kalangkum Pothellaam En Kanneer Thutaitthavarae En Paaranggal Aerrukkondavarae Ummaitthavira Ummaitthavira Yaarai Nampuvaen Yaaraith Thaetuvaen - Endha Nilaimaiyilum