பாடல் #42635
என் ஆத்துமாவே கர்த்தரை
🔤 En Aatthumaavae Karttharai
🎙 Bro. டேவிட் சாம் ஜாய்சன் • 💿 தாழ்வில் நினைத்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி அவர் செய்த சகல உபகாரங்களை நீ மறவாமலே ஸ்தோத்தரி 1. உன் அக்கிரமங்கள் எல்லாம் அவர் மன்னித்து உன் நோய்களை குணமாக்கினார் உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு உன்னை கிருபையினால் முடிசூட்டினார் தம் நன்மையினால் உன் வாயை திருப்பிதியாக்கினார் கழுகுக்கு சமானமாக உன் வயதை திருப்பினார் 2. பூமிக்கு வானம் எத்தனை தூரமோ அவர் கிருபையும் பெரிதானதே மேற்குக்கும் கிழக்குக்கும் உள்ள தூரம்போல் உன் பாவத்தை விலக்கினாரே ஒரு தகப்பன் இரங்குவது போல் அவர் உனக்கும் இரங்கினார் நீ மண்ணென்று அறிந்த பின்பும் அவர் நினைவு கூர்ந்திட்டார் என் ஆத்துமாவே கர்த்தை நீ ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி அவர் செய்த சகல உபகாரங்களை நீ மறவாமலே ஸ்தோத்தரி என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரி என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aatthumaavae Karttharai Nee Sthotthari En Muzhu Ullamae Avar Parisuttha Naamatthai Sthotthari Avar Seytha Sakala Ubakaaranggalai Nee Maravaamalae Sthotthari 1. Un Akkiramanggal Ellaam Avar Mannitthu Un Noykalai Kunamaakkinaar Un Piraananai Azhivukku Vilakki Meettu Unnai Kirupaiyinaal Mutisoottinaar Tham Nanmaiyinaal Un Vaayai Thiruppithiyaakkinaar Kazhukukku Samaanamaaga Un Vayathai Thiruppinaar 2. Poomikku Vaanam Etthanai Thooramo Avar Kirupaiyum Perithaanathae Maerkukkum Kizhakkukkum Ulla Thoorampol Un Paavatthai Vilakkinaarae Oru Thakappan Irangkuvathu Pol Avar Unakkum Irangkinaar Nee Mannenru Arindha Pinpum Avar Ninaivu Koornthittaar En Aatthumaavae Kartthai Nee Sthotthari En Muzhu Ullamae Avar Parisuttha Naamatthai Sthotthari Avar Seytha Sakala Ubakaaranggalai Nee Maravaamalae Sthotthari En Aatthumaavae Karttharai Nee Sthotthari En Muzhu Ullamae Avar Parisuttha Naamatthai Sthotthari