பாடல் #42608
என் யேசுவை மாத்திரம் பார்த்துக்கொண்டு
🔤 En Yaesuvai Maatthiram Paartthukkontu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் யேசுவை மாத்திரம் பார்த்துக்கொண்டு பொன் யேசுவின் அழகையே சிந்தை செய்து -2 என் இயேசுவுக் கெந்தனை தத்தம் செய்து -2 இயேசுவைப் போலாக - நான் வாஞ்சிக்கிறேன் உலகமும் அதிலுள்ள இச்சைகளும் உலகுடன் அலைபோல அழிந்துபோகும் -2 நலமுடன் அவர் சித்தம் செய்து கொண்டு -2 உலகினில் ஜீவிக்க - வாஞ்சிக்கிறேன் என் ஜீவனென் ஏசுவில் படைத்துவிட்டு ஜீவனப் பெருமையும் தள்ளிவிட்டு -2 ஜீவனாம் இயேசுவை எடுத்துக்கொண்டு -2 ஜெய ஜீவியம் செய்ய வாஞ்சிக்கிறேன் கண்ணினது இச்சையைத் தள்ளிவிட்டு கண்களாலென் இயேசுவைப் பார்த்துக்கொண்டு -2 கண்மணியாம் அவரது இருதயத்தை -2 கவர்ந்துமே வாழ்ந்திட வாஞ்சிக்கிறேன் மாமிசத்தின் இச்சையை வெறுத்துவிட்டு மாமிச சரீரத்தை அறைந்துவிட்டு -2 மறுரூப சாயலைப் பெற்றுக்கொண்டு -2 மறுரூபமாகவே வாஞ்சிக்கிறேன் இவ்வுலகில் வேறாசை எனக்கில்லையே இவ்வுலகில் என்னாசை பொன் இயேசுவே -2 இவ்வுலகில் காண்பவை மாயை தானே -2 உலகினில் இயேசுவே - என் பொக்கிஷம் என் நேசரே எந்தனைக் காத்துக்கொள்ளும் என்னுள்ளினில் எப்போதும் வாசஞ் செய்யும் -2 பொன்முகத்தை ஏழையான் பார்க்குமட்டும் -2 பரிசுத்தமாயென்னை - வைத்துக்கொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yaesuvai Maatthiram Paartthukkontu Pon Yaesuvin Azhakaiyae Sinthai Seythu -2 En Yesuvuk Kendhanai Thattham Seythu -2 Yesuvaip Polaaga - Naan Vaanjsikkiraen Ulakamum Athilulla Ichsaigalum Ulakudan Alaipola Azhinthupokum -2 Nalamudan Avar Sittham Seythu Kontu -2 Ulakinil Jeevikka - Vaanjsikkiraen En Jeevanen Aesuvil Pataitthuvittu Jeevanap Perumaiyum Thallivittu -2 Jeevanaam Yesuvai Etutthukkontu -2 Jeya Jeeviyam Seyya Vaanjsikkiraen Kanninathu Ichsaiyaith Thallivittu Kankalaalen Yesuvaip Paartthukkontu -2 Kanmaniyaam Avarathu Irudhayatthai -2 Kavarnthumae Vaazhnthida Vaanjsikkiraen Maamisatthin Ichsaiyai Verutthuvittu Maamisa Sareeratthai Arainthuvittu -2 Marurooba Saayalaip Perrukkontu -2 Maruroobamaagavae Vaanjsikkiraen Ivvulakil Vaeraasai Enakkillaiyae Ivvulakil Ennaasai Pon Yesuvae -2 Ivvulakil Kaanpavai Maayai Thaanae -2 Ulakinil Yesuvae - En Pokkisham En Naesarae Endhanaik Kaatthukkollum Ennullinil Eppothum Vaasanj Seyyum -2 Ponmugatthai Aezhaiyaan Paarkkumattum -2 Parisutthamaayennai - Vaitthukkollum