பாடல் #42141
இயேசுவின் நாமமே மேலானது
🔤 Yesuvin Naamamae Maelaanathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமமே மேலானது வானிலும் பூவிலும் உயர்வானது தேனிலும் இனிமையானது அது தேனிலும் மதுரமானது 1.பாவங்கள் பயங்கள் போக்கும் வல்ல நாமத்தை பாடப்பாட உள்ளம் மகிழுதே அருமையானது அன்பாலானது பாசமுள்ள இயேசு நாமமே 2.கோடி கோடி துதிகள் சொல்லிபாடி மகிழ்வோம் தேடி வந்த தெய்வ நாமத்தை புனிதமானது மகிமையானது போற்றிப் பாடும் இன்ப நாமத்தை 3.இன்னல் நீக்கி இன்பம் தரும் இனிய நாமத்தை ஊருக்கெல்லாம் சொல்லி மகிழ்வோம் மென்மையானது மேன்மையானது மாந்தர் போற்றும் மன்னன் நாமமே 4.அற்புதங்கள் அதிசயங்கள் செய்ய வல்லதே ஆற்றி தேற்றி அரவணைத்திடும் வழியுமான சத்தியமானது ஜீவனையே தந்த நாமமே 5.இந்த நாமத்தால் அநேகர் என்னை வெறுத்தாலும் தெம்பாக தினமும் பாடுவேன் ஆத்ம நண்பனே அன்பின் இரட்சகா உந்தன் நாமம் என்றும் வாழ்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamamae Maelaanathu Vaanilum Poovilum Uyarvaanathu Thaenilum Inimaiyaanathu Athu Thaenilum Mathuramaanathu 1.paavanggal Payanggal Pokkum Valla Naamatthai Paadappaada Ullam Makizhuthae Arumaiyaanathu Anpaalaanathu Paasamulla Yesu Naamamae 2.koti Koti Thuthigal Sollipaati Makizhvom Thaeti Vandha Theyva Naamatthai Punidhamaanathu Makimaiyaanathu Porrip Paatum Inba Naamatthai 3.innal Neekki Inbam Tharum Iniya Naamatthai Oorukkellaam Solli Makizhvom Menmaiyaanathu Maenmaiyaanathu Maandhar Porrum Mannan Naamamae 4.arpudhanggal Athisayanggal Seyya Vallathae Aarri Thaerri Aravanaitthitum Vazhiyumaana Satthiyamaanathu Jeevanaiyae Thandha Naamamae 5.indha Naamatthaal Anaegar Ennai Verutthaalum Thempaaga Thinamum Paatuvaen Aathma Nanpanae Anpin Iratsakaa Undhan Naamam Enrum Vaazhkavae