பாடல் #42132
மண்ணின் சாயல் மாறுமே
🔤 Mannin Saayal Maarumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணின் சாயல் மாறுமே விண்ணின் சாயல் ஆகுமே மறுரூபம் ஆவேன் இயேசுவிலே – என் (2) 1. பசிதாகம் இல்லா உலகமது பஞ்சமும் துன்பமும் இல்லையங்கு வியாதியும் இல்லையே வருத்தமும் இல்லையே தேவனின் இராஜ்ஜியம் இன்பத்தின் எல்லையே என்று நான் காண்பேனோ பரலோகினை – என் 2. ஜீவத் தண்ணீருள்ள நதி ஒன்றுண்டாம் கனி தரும் ஜீவ விருட்சமுண்டாம் சூரிய சந்திரன் வேண்டுவதில்லையே தேவனின் மகிமையில் ஒளியெங்கும் வெள்ளமே பொற்தள வீதியில் ஆடிடுவேன் – என் 3. சீக்கிரம் வருவேன் என்று சென்றவர் நடுவானில் தோன்றிடும் நாள் நெருங்குதே மணவாட்டி நானுமே ஆயத்தமாகுவேன் நேசரைக் காணவே ஆவலும் பொங்குதே என்று நான் காண்பேனோ என் இயேசுவை – என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannin Saayal Maarumae Vinnin Saayal Aakumae Maruroobam Aavaen Yesuvilae – En (2) 1. Pasithaagam Illaa Ulakamathu Panjjamum Thunbamum Illaiyangku Viyaathiyum Illaiyae Varutthamum Illaiyae Devanin Iraajjiyam Inbatthin Ellaiyae Enru Naan Kaanpaeno Paralokinai – En 2. Jeevath Thanneerulla Nathi Onruntaam Kani Tharum Jeeva Virutsamuntaam Sooriya Santhiran Vaentuvathillaiyae Devanin Makimaiyil Oliyengkum Vellamae Porthala Veethiyil Aatituvaen – En 3. Seekkiram Varuvaen Enru Sendravar Natuvaanil Thonritum Naal Nerungkuthae Manavaatti Naanumae Aayatthamaakuvaen Naesaraik Kaanavae Aavalum Pongkuthae Enru Naan Kaanpaeno En Yesuvai – En