பாடல் #42115
என் புலம்பலை ஆனந்த
🔤 En Pulambalai Aanandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றினீர் நன்றி ஐயா என் துக்கத்தை சந்தோஷமாக மாற்றி புதுவாழ்வு தந்தீரய்யா (2) ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் என் உயிர் நாளெல்லாம் நன்றி சொல்லி உம்மைப் போற்றிடுவேன் என் ஜீவகாலமெல்லாம் (2) நம்பிக்கையற்றோனாய் அலைந்த வேளை உம் கரம் என்னைத் தாங்கினதே (2) நான் உன்னோடு இருப்பேன் என்று சொல்லி வாக்கு தந்து நடத்தி வந்தீர் தனிமையில் நான் அழுத போது உம் கரம் என்னைத் தேற்றினதே (2) கண்ணீரை நீர் துடைத்து விட்டு கரத்தைப் பிடித்து நடத்தி வந்தீர் (2) எல்லாம் முடிந்தது என்று சொல்லி சத்துரு என்னை நிந்திக்கையில் (2) இனி தான் ஆரம்பம் என்று சொல்லி இம்மட்டுமாக நடத்தி வந்தீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pulambalai Aanandhak Kalippaaga Maarrineer Nanri Aiyaa En Thukkatthai Santhoshamaaga Maarri Puthuvaazhvu Thantheerayyaa (2) Aaraathippaen Naan Aaraathippaen En Uyir Naalellaam Nanri Solli Ummaip Porrituvaen En Jeevakaalamellaam (2) Nampikkaiyarronaay Alaindha Vaelai Um Karam Ennaith Thaangkinathae (2) Naan Unnotu Iruppaen Enru Solli Vaakku Thanthu Natatthi Vantheer Thanimaiyil Naan Azhudha Pothu Um Karam Ennaith Thaerrinathae (2) Kanneerai Neer Thutaitthu Vittu Karatthaip Pititthu Natatthi Vantheer (2) Ellaam Mutindhathu Enru Solli Satthuru Ennai Ninthikkaiyil (2) Ini Thaan Aarambam Enru Solli Immattumaaga Natatthi Vantheer (2)