பாடல் #42112
தேவா உம்மை நான்
🔤 Thaevaa Ummai Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா உம்மை நான் என் வாழ்வில் ருசித்தீடவே மீதமுள்ள என் நாட்களில் உலகை நான் வெறுத்தீடவே நாதா... தேவா... இரங்கும்... உம்... தயவால் 1.பாதை எல்லாம் இருளாகி போக என் வாழ்வில் வந்திட்ட வீழ்ச்சி எதுவோ எதிலே விழுந்தேன் என்று அறிந்து எழும்பி உமக்காய் எரிந்தீடவே 2.உலகில் பாடுகள் எனக்கு உண்டு ஆனாலும் நீர் என்னை கைவிடுவதில்லை ஆகிலும் என்னுள்ளில் கலக்கம் ஏனோ உம்மை என் கண்கள் பார்க்க வேண்டுமே 3.பச்சை மரத்திற்கு இந்த பாடு என்றால் பட்ட மரம் எவ்வளவு துடிக்கும் என்று எனக்காய் ஏங்கி ஜீவன் கொடுத்த உம் அன்பு எத்தனை மேலானது 4.வானில் நீர் தோன்றும் நாளொன்று உண்டு அந்நாளில் என் கண்கள் உம்மை காணும் உம்மோடு சேர்த்து என் கண்ணீர் துடைத்து நித்திய மகிழ்ச்சி நீர் தந்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Ummai Naan En Vaazhvil Rusittheedavae Meedhamulla En Naatkalil Ulakai Naan Veruttheedavae Naathaa... Thaevaa... Irangkum... Um... Thayavaal 1.paathai Ellaam Irulaaki Poga En Vaazhvil Vanthitta Veezhchsi Ethuvo Ethilae Vizhunthaen Enru Arinthu Ezhumpi Umakkaay Erintheedavae 2.ulakil Paatugal Enakku Untu Aanaalum Neer Ennai Kaivituvathillai Aakilum Ennullil Kalakkam Aeno Ummai En Kankal Paarkka Vaentumae 3.pachsai Maratthirku Indha Paatu Enraal Patta Maram Evvalavu Thutikkum Enru Enakkaay Aengki Jeevan Kotuttha Um Anpu Etthanai Maelaanathu 4.vaanil Neer Thonrum Naalonru Untu Annaalil En Kankal Ummai Kaanum Ummotu Saertthu En Kanneer Thutaitthu Nitthiya Makizhchsi Neer Thanthituveer