பாடல் #42099
எல்லா மகிமைக்கும்
🔤 Ellaa Makimaikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா மகிமைக்கும் பாத்திரரே எல்லா கனத்திற்கும் உரியவரே உந்தன் மேலான நாமம் என் வாழ்வில் போதும் என் குறைவுகள் எல்லாம் நிறைவாகும் உம் நாமத்தினால் நான் கேட்கின்ற யாவையும் தாமதம் இன்றி தருபவரே நான் நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் என் வாழ்வில் செய்பவரே என் உதடுகளில் தோன்றும் வார்த்தைகளை தோன்றும் முன்பே அறிபவரே என் விருப்பங்களை உம் விருப்பம் என்று விரும்பியே என் வாழ்வில் தருபவரே என் பாதைகளில் தோன்றும் வாதைகளின் சேதங்கள் அணுகாமல் காப்பவரே உம் சேனைகளால் உந்தன் ஆணைகொண்டு தீதென்னை தீண்டாமல் நிறைப்பவரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Makimaikkum Paatthirarae Ellaa Kanatthirkum Uriyavarae Undhan Maelaana Naamam En Vaazhvil Pothum En Kuraivugal Ellaam Niraivaakum Um Naamatthinaal Naan Kaetkindra Yaavaiyum Thaamatham Inri Tharubavarae Naan Ninaippatharkum Jepippatharkum Athigamaay En Vaazhvil Seypavarae En Udhatugalil Thonrum Vaartthaigalai Thonrum Munpae Aribavarae En Viruppanggalai Um Viruppam Enru Virumpiyae En Vaazhvil Tharubavarae En Paathaigalil Thonrum Vaathaigalin Saedhanggal Anukaamal Kaappavarae Um Saenaigalaal Undhan Aanaikontu Theethennai Theentaamal Niraippavarae.