பாடல் #42088
உனக்காக ஒருவர் உண்டு
🔤 Unakkaaga Oruvar Untu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்காக ஒருவர் உண்டு கலங்கிடாதே
உன்னை காக்க ஒருவர் உண்டு திகைத்திடாதே
உன்னை சுமக்க நித்தம் அரைக்க
கரம் கொடுக்க இயேசு உண்டு
கலங்கிடாதே நீ திகைத்திடாதே
உறவயாருமில்லை என்று கலங்கிடாதே
உதவிசெய்வார் இல்லையென்று பயப்படாதே
உறவென்று சொல்லிக்கொள்ள
உனக்காக இயேசு உண்டு
உனக்காக உதவி செய்ய
அவர் அன்பின் கரங்களுக்கு
கலங்கிடாதே நீ பயப்படாதே
வானின் கீழும் பூமிமேலும் இயேசு இல்லாமல்
எந்த ஒரு மனிதனுக்கும் இரட்சிப்பு இல்லை
இயேச்வை உன் வாயினாலே அறிக்கை செய்து
தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று
உன் இருதயத்தில் விசுவாசி இரட்சிப்பை பெற்றிருந்தார்
நித்திய ஜீவனையும் உனக்கு அவர் தந்திருந்தார்
அறிக்கை செய்திடு விசசவாம் வைத்திடு
பாவிகளை இரட்சிக்க உலகில் வந்தவர்
பாவங்களை போக்கிடவே தன்னைத் தந்தவர்
இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கிவிடும்
சுத்திகரித்து புதுவாழ்வை உனக்கு தரும்
ஒடி வந்திடு புதுவாழ்வை அடைந்திடு
வாழ்க்கையிலே தோல்விகளை வாழவிடாதே
வியாதியினால் கலக்கமுற்று வதங்கிவிடாதே
உன் வாழ்வில் வெளிச்சம் தர
ஒளியாக இயேசு உண்டு
உன் நோய்கள் நீக்கிட வேகமாகப் கும் தழும்பு உண்டு
வாடிவிடாதே நீ வருந்திவிடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkaaga Oruvar Untu Kalangkitaathae
Unnai Kaakka Oruvar Untu Thikaitthitaathae
Unnai Sumakka Nittham Araikka
Karam Kotukka Yesu Untu
Kalangkitaathae Nee Thikaitthitaathae
Uravayaarumillai Enru Kalangkitaathae
Udhaviseyvaar Illaiyenru Payappataathae
Uravenru Sollikkolla
Unakkaaga Yesu Untu
Unakkaaga Udhavi Seyya
Avar Anpin Karanggalukku
Kalangkitaathae Nee Payappataathae
Vaanin Keezhum Poomimaelum Yesu Illaamal
Endha Oru Manidhanukkum Iratsippu Illai
Yechvai Un Vaayinaalae Arikkai Seythu
Devan Avarai Maritthorilirunthu Ezhuppinaarenru
Un Irudhayatthil Visuvaasi Iratsippai Perrirunthaar
Nitthiya Jeevanaiyum Unakku Avar Thanthirunthaar
Arikkai Seythitu Visasavaam Vaitthitu
Paavigalai Iratsikka Ulakil Vandhavar
Paavanggalai Pokkidavae Thannaith Thandhavar
Yesuvin Rattham Sakala Paavanggalai Neekkivitum
Sutthigaritthu Puthuvaazhvai Unakku Tharum
Oti Vanthitu Puthuvaazhvai Atainthitu
Vaazhkkaiyilae Tholvigalai Vaazhavitaathae
Viyaathiyinaal Kalakkamurru Vathangkivitaathae
Un Vaazhvil Veliccham Thara
Oliyaaga Yesu Untu
Un Noykal Neekkida Vaegamaagap Kum Thazhumpu Untu
Vaativitaathae Nee Varunthivitaathae