பாடல் #42065
நேசத்தில் இனியவரே
🔤 Naesatthil Iniyavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசத்தில் இனியவரே வெள்ளைப்போளச் செண்டே என்கேதியில் பூக்கும் மருதோன்றிப் பூங்கொத்தே உங்க நிழலில் அமர்கிறேன் உங்க சமூகத்தில் மகிழ்கிறேன் காட்டு மரங்களில் கிச்சிலி நீரே. 1.இடது கையால் என்னைத் தாங்கி வலக்கரத்தால் என்னைத் தழுவி ஆற்றித் தேற்றுகிறீர் உங்க நேசத்தில் மயங்கினேன் உங்க நிழலில் அமர்கிறேன் உங்க சமூகத்தில் மகிழ்கிறேன் காட்டு மரங்களில் கிச்சிலி நீரே. 2.மலர்ந்த முகத்தை எனக்கு காட்டி கதவின் வழியே கையை நீட்டி என்னை இழுத்துக் கொண்டீர் உம்மில் உறவாடி மகிழ்கிறேன் 3.ஒளி மிகுந்த வெண்மையானீர் தனித்து தோன்றும் சிவப்புமானீர் மிகச் சிறந்தவரே - உம்மைத் துதித்து மகிழ்கிறேன் 4வெண்புறா போல் ததும்பும் கண்களும் வெள்ளைப்போளம் வடியும் உதடும் என்னைக் கவர்கிறதே உங்க அழகில் மயங்கினேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesatthil Iniyavarae Vellaippolach Sentae Enkaethiyil Pookkum Maruthonrip Poongkotthae Ungga Nizhalil Amarkiraen Ungga Samoogatthil Makizhkiraen Kaattu Maranggalil Kichsili Neerae. 1.idathu Kaiyaal Ennaith Thaangki Valakkaratthaal Ennaith Thazhuvi Aarrith Thaerrukireer Ungga Naesatthil Mayangkinaen Ungga Nizhalil Amarkiraen Ungga Samoogatthil Makizhkiraen Kaattu Maranggalil Kichsili Neerae. 2.malarndha Mugatthai Enakku Kaatti Kathavin Vazhiyae Kaiyai Neetti Ennai Izhutthuk Konteer Ummil Uravaati Makizhkiraen 3.oli Mikundha Venmaiyaaneer Thanitthu Thonrum Sivappumaaneer Migach Sirandhavarae - Ummaith Thuthitthu Makizhkiraen 4venpuraa Pol Thathumpum Kankalum Vellaippolam Vatiyum Udhatum Ennaik Kavarkirathae Ungga Azhakil Mayangkinaen