பாடல் #42015
உமை வாழ்த்தி
🔤 Umai Vaazhtthi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமை வாழ்த்திப் பாடுகின்ற உள்ளம் வேண்டும் - அது வினைபாவம் நீங்கியதாய் விளங்க வேண்டும்! தினம் உம்மில் என்நெஞ்சம் திளைக்க வேண்டும் - அருள் சுனையாடி உம் அன்பைச் சுவைக்க வேண்டும்! 1 இயேசுவேநீர் என்நெஞ்சில் ஆள வேண்டும் - உம் நேசமதில் நானென்றும் நிலைக்க வேண்டும்! பாசமுடன் அமைந்தடங்கும் பணிவு கொண்டே - விசு வாசமதில் என்னிதயம் வளர வேண்டும்! - உமை 2 நீர் வாழும் இல்லமதாய் நெஞ்சம் கேட்டேன் - அதில் தூயாவிக் கனியாவும் தோன்ற வேண்டும்! காயாதே கனியும் கிறிஸ்து ஏசுஉள்ளம் - போல் ஓயாமல் என்நெஞ்சம் உருகவேண்டும்! - உமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umai Vaazhtthip Paatukindra Ullam Vaentum - Athu Vinaipaavam Neengkiyathaay Vilangga Vaentum! Thinam Ummil Ennenjjam Thilaikka Vaentum - Arul Sunaiyaati Um Anpaich Suvaikka Vaentum! 1 Yesuvaeneer Ennenjsil Aala Vaentum - Um Naesamathil Naanenrum Nilaikka Vaentum! Paasamudan Amaindhatangkum Panivu Kontae - Visu Vaasamathil Ennidhayam Valara Vaentum! - Umai 2 Neer Vaazhum Illamathaay Nenjjam Kaettaen - Athil Thooyaavik Kaniyaavum Thondra Vaentum! Kaayaathae Kaniyum Kiristhu Aesuullam - Pol Oyaamal Ennenjjam Urugavaentum! - Umai