பாடல் #42013
தகுதியோ எனக்கு ஏதுமில்லை!
🔤 Thakuthiyo Enakku Aethumillai!
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தகுதியோ எனக்கு ஏதுமில்லை! தரமுடையேனோ இல்லை இல்லை! மிகுதியாய்ப் பாவம் புரிந்த இப்பாவி மீட்பினைப் பெற்றிட முடியுமா சுவாமி? இருக்கின்ற நிலையோடே வருகின்றேன் ஐயா! - உம் திருச்சிலுவை அருள்நாடி அணைகின்றேன் ஐயா! 1. உலகத்தின் பவமெல்லாம் சுமக்க நீர் வந்ததால் ஒருபாவம் அறியாத பலியாடும் ஆனதால் - இருக்கின்ற 2. சொந்தநல் உதிரத்தை அன்புடன் எனக்காய் சொரிந்து நீர் என்னை அழைக்கிறீர் ஆதலால் - இருக்கின்ற 3. ஆயிரம் எண்ணத்தால் அலைப்புண்டு அமிழும்நான் ஐயத்தால் அச்சத்தால் அஞ்சியே சாகும்நான் - இருக்கின்ற 4. வறியனாய் வாட்டங்கள் உடையவனாய் வருகின்றேன் வாழ்வருள்வோர் உமையன்றி மற்றோரைக் காண்கிலேன்! - இருக்கின்ற
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thakuthiyo Enakku Aethumillai! Tharamutaiyaeno Illai Illai! Mikuthiyaayp Paavam Purindha Ippaavi Meetpinaip Perrida Mutiyumaa Suvaami? Irukkindra Nilaiyotae Varukinraen Aiyaa! - Um Thiruchsiluvai Arulnaati Anaikinraen Aiyaa! 1. Ulakatthin Pavamellaam Sumakka Neer Vandhathaal Orupaavam Ariyaadha Paliyaatum Aanathaal - Irukkindra 2. Sondhanal Uthiratthai Anpudan Enakkaay Sorinthu Neer Ennai Azhaikkireer Aadhalaal - Irukkindra 3. Aayiram Ennatthaal Alaippuntu Amizhumnaan Aiyatthaal Acchatthaal Anjsiyae Saakumnaan - Irukkindra 4. Variyanaay Vaattanggal Utaiyavanaay Varukinraen Vaazhvarulvor Umaiyanri Marroraik Kaankilaen! - Irukkindra