பாடல் #42012
வாயிலண்டை வந்து
🔤 Vaayilantai Vanthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாயிலண்டை வந்து நிற்கிறேன் - இந்தப் பாவியேனைப் பாரும் இயேசுவே! எந்தன் ஆடை கந்தை கந்தையே - கையில் ஏதுமில்லை கறைகள் அன்றியே! வாய் திறந்து வார்த்தை சொல்லவோ - எனக்கு வலிமை ஏதும் இல்லை இல்லையே! கதவருகில் அழுது நிற்கிறேன் - தட்ட கைபலமோ இல்லை அன்பரே! இயேசுவே என் நேசரே என்கிறேன் - வேறு ஏதுமே பேசநான் அறிகிலேன்! வாயிலே நீர் ஆவீர் அல்லவோ - எனக்கு வாழ்வருள் வேண்டும் நீர் அண்ணலே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaayilantai Vanthu Nirkiraen - Indhap Paaviyaenaip Paarum Yesuvae! Endhan Aatai Kanthai Kanthaiyae - Kaiyil Aethumillai Karaigal Anriyae! Vaay Thiranthu Vaartthai Sollavo - Enakku Valimai Aethum Illai Illaiyae! Kathavarukil Azhuthu Nirkiraen - Thatta Kaibalamo Illai Anbarae! Yesuvae En Naesarae Enkiraen - Vaeru Aethumae Paesanaan Arikilaen! Vaayilae Neer Aaveer Allavo - Enakku Vaazhvarul Vaentum Neer Annalae!