பாடல் #42010
பாவம் என்னை
🔤 Paavam Ennai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவம் என்னைத் தொடர்ந்தாலும் - இயேசு தேவா, உம்மை மறவேனே 1. செய்பாவம் நினைந்துநான் அழுகின்றேன் - அதை செய்யாமல் இருந்திட பலமுமில்லை மெய்யாக உம்துணை வேண்டுமய்யா - எந்தன் அய்யா நின்பிள்ளை நானல்லவா! 2. உள்ளத்தில் நல்லெண்ணம் பல உண்டு - ஆனால் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன் உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் - எந்தன் உடலையே உமக்கென தந்துவிட்டேன் 3. மன்னவா உம்மிடம் ஓடிவந்தேன் - பாவ மன்னிப்பு உண்டென நம்பி வந்தேன் மன்னிப்பு வழங்கினால் போதாது - என்னை மாற்றாமல் போய்விடில் வாழ்வேது!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavam Ennaith Thodarnthaalum - Yesu Thaevaa, Ummai Maravaenae 1. Seypaavam Ninainthunaan Azhukinraen - Athai Seyyaamal Irunthida Palamumillai Meyyaaga Umthunai Vaentumayyaa - Endhan Ayyaa Ninpillai Naanallavaa! 2. Ullatthil Nallennam Pala Untu - Aanaal Vellatthil Atibattuch Sellukinraen Ullathai Ummidam Sollivittaen - Endhan Udalaiyae Umakkena Thanthuvittaen 3. Mannavaa Ummidam Otivanthaen - Paava Mannippu Untena Nampi Vanthaen Mannippu Vazhangkinaal Pothaathu - Ennai Maarraamal Poyvitil Vaazhvaethu!