பாடல் #42009
சர்வவல் லமையும்
🔤 Sarvaval Lamaiyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சர்வவல் லமையும் சரிநிகர் பரிவும் சங்கம மாகியஎந்தாய், அர்ப்பராய் வாழ்ந்தோம் அருணெறி தவறி அலைகிற ஆடுபோல் ஆனோம், கர்வமே கொண்டுன் கற்பனை களையே கைதவறிக் குற்றம் புரிந்தோம் கர்த்தனே எங்கள் அத்தனே அரசே கடைகணித் தருளவே வேண்டும். 2. செய்யத்தக செய்யத் தவறினோம் அந்தோ செயத்தக பலபல செய்தோம் உயத்தகு நெறியே உன்மகன் அன்றி ஒருநெறி இல்லையே,எங்கும் இயங்கிடும் கிறிஸ்து இயேசுவின் மூலம் எங்களைப் பொறுத்தருள் செய்து மயக்கறுத் தெம்மன மாசுகள் போக்கி மன்னியும் மன்னியும் இரங்கி. 3. குற்றமே புரிந்து குறைபடும் எமையே குறைகளைக் களைந்துசீர் செய்தே இற்றைநாள் எந்தாய் எப்படி யாயினும் எங்களுக் கிரங்கிட வேண்டும் பற்றிய உனதுபரிசுத்த பெயர்க்கே உற்றவா றொழுகிட அருள்வாய் வெற்றிசேர் கிறிஸ்து இயேசுவின் மூலம் வேண்டிவ ணங்கினோம்,ஆமென்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sarvaval Lamaiyum Sarinigar Parivum Sanggama Maakiyaenthaay, Arpparaay Vaazhnthom Aruneri Thavari Alaikira Aatupol Aanom, Karvamae Kontun Karpanai Kalaiyae Kaidhavarik Kurtram Purinthom Kartthanae Enggal Atthanae Arasae Kataiganith Tharulavae Vaentum. 2. Seyyatthaka Seyyath Thavarinom Antho Seyatthaka Palapala Seythom Uyatthaku Neriyae Unmakan Anri Oruneri Illaiyae,engkum Iyangkitum Kiristhu Yesuvin Moolam Enggalaip Poruttharul Seythu Mayakkaruth Themmana Maasugal Pokki Manniyum Manniyum Irangki. 3. Kurtramae Purinthu Kuraibatum Emaiyae Kuraigalaik Kalainthuseer Seythae Irrainaal Enthaay Eppati Yaayinum Enggaluk Kirangkida Vaentum Parriya Unathubarisuttha Peyarkkae Urtravaa Rozhukida Arulvaay Verrisaer Kiristhu Yesuvin Moolam Vaentiva Nangkinom,aamen.