பாடல் #42008
நம்பிக்கையில் நான்
🔤 Nampikkaiyil Naan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்பிக்கையில் நான் வளர வேண்டுமையா - திரு நம்பிக்கையில் நான் திகழத் தூண்டுமையா 1. இறைவனாய் படைத்துயிர் அனைத்தையுமே நிறைவான ஆற்றலுடன் ஆளுபவர் குறையாத அன்புடைய தந்தையவர் மறை காட்டும் மாட்சிஇறை மன்னர் தமில் 2. தந்தையருள் திருவாக்காம் இறை மைந்தர் வந்துலகில் தூயாவியால் கன்னி மக னாய் நிந்தைமிகு சிலுவையில் உயிர் நீத்து விந்தை உயிர்த்தேகி பரம தீர்ப்பில் வருவார் 3 புது உண்மை பலகாட்டும் ஆவியரும் பொதுவான ஒரே துய்ய திருச்சபையும் புதுவாழ்வும் புனிதரின் கூட்டுறவும் கதி மன்னிப்புயிர்த்தெழல் உண்டு எனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampikkaiyil Naan Valara Vaentumaiyaa - Thiru Nampikkaiyil Naan Thigazhath Thoontumaiyaa 1. Iraivanaay Pataitthuyir Anaitthaiyumae Niraivaana Aartraludan Aalubavar Kuraiyaadha Anputaiya Thanthaiyavar Marai Kaattum Maatsiirai Mannar Thamil 2. Thanthaiyarul Thiruvaakkaam Irai Maindhar Vanthulakil Thooyaaviyaal Kanni Maka Naay Ninthaimiku Siluvaiyil Uyir Neetthu Vinthai Uyirtthaeki Parama Theerppil Varuvaar 3 Puthu Unmai Palakaattum Aaviyarum Pothuvaana Orae Thuyya Thirucchapaiyum Puthuvaazhvum Punidharin Kootturavum Kathi Mannippuyirtthezhal Untu Enum