பாடல் #42007
வானும் புவியும்
🔤 Vaanum Puviyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வானும் புவியும் வையகமும் வனைந்த வல்ல பரனான வானகத் தந்தையை நம்புகிறேன் 2. அவரொரே திருமகன் கன்னியிடம் அனைவரின் நாதர் கிறிஸ்துவாய் அவதரித்ததையும் நம்புகிறேன் 3. பிலாத்துவின் கீழவர் சிலுவையதில் பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி பெருங்குழி புகுந்ததை நம்புகிறேன் 4. உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள் உயரே எழுந்து பரன் வலமே உடனிருந்ததையும் நம்புகிறேன் 5. உயிருள்ளோரும் இறந்தோரும் உண்மையாய் தீர்ப்பை அடைந்திடவே உறுதியாய் வருவார் நம்புகிறேன் 6. தூயாவி தூயோர் சபை உறவு பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு மெய் நிலைவாழ்வையும் நம்புகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vaanum Puviyum Vaiyakamum Vanaindha Valla Paranaana Vaanakath Thanthaiyai Nampukiraen 2. Avarorae Thirumakan Kanniyidam Anaivarin Naadhar Kiristhuvaay Avatharitthathaiyum Nampukiraen 3. Pilaatthuvin Keezhavar Siluvaiyathil Perumpaatugaludan Irandhatangki Perungkuzhi Pukundhathai Nampukiraen 4. Uyirotezhunthaar Moonraam Naal Uyarae Ezhunthu Paran Valamae Udanirundhathaiyum Nampukiraen 5. Uyirullorum Iranthorum Unmaiyaay Theerppai Atainthidavae Uruthiyaay Varuvaar Nampukiraen 6. Thooyaavi Thooyor Sapai Uravu Paava Mannippu Udal Uyirppu Mey Nilaivaazhvaiyum Nampukiraen