பாடல் #42006
உலகும் வானம் செய்தாளும்
🔤 Ulakum Vaanam Seythaalum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உலகும் வானம் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய் இலகு மருளம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன் 2. அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதி முதலெங் கர்த்தனுமாய் தவறிலேசு கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன் 3. பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னி மரியிடமாய் உருவாய் நரரவதாரமதாய் உதித்தாரெனவும் நம்புகிறேன் 4. பொந்துபிலாத்ததி பதி நாளில் புகலரு பாடுகளை யேற்று உந்துஞ் சிலுவையறையுண்டு உயிர் விட்டாரென நம்புகிறேன் 5. இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலே இறந்தோரிட நின்றே உயிரோடு எழுந்தாரெனவும் நம்புகிறேன் 6. சந்தத மோட்சம் எழுந்தருளிச் சருவ வல்ல பரனான எந்தை தன்வல பாரிசமே இருக்கின்றாரென நம்புகிறேன் 7. உயிருள்ளோரை மரித்தோரை உத்தம ஞாயம் தீர்த்திடவே ஜெயமாய்த் திரும்ப வருவாரெனச் சிந்தையார நம்புகிறேன் 8. பரிசுத்தாவியை நம்புகிறேன் பரிசுத்த மா பொதுச்சபையும் பரிசுத்தர்களின் ஐக்கியமும் பரிவாயுண்டென நம்புகிறேன் 9. பாவ மன்னிப்புளதெனவும் மரித்தோருயிர்த்தெழு வாரெனவும் ஓவா நித்திய ஜீவனுமே உளதெனவும் யான் நம்புகிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ulakum Vaanam Seythaalum Oppil Sarva Vallavaraay Ilaku Marulam Thanthaiyaam Empiraandranai Nampukiraen 2. Avaroru Paeraamaindhanumaay Aathi Mudhaleng Kartthanumaay Thavarilaesu Kiristhuvaiyum Sandhathamae Yaan Nampukiraen 3. Parisutthaavi Arulathanaal Patimael Kanni Mariyidamaay Uruvaay Nararavathaaramathaay Uthitthaarenavum Nampukiraen 4. Ponthupilaatthathi Pathi Naalil Pugalaru Paatugalai Yaerru Unthunj Siluvaiyaraiyuntu Uyir Vittaarena Nampukiraen 5. Iranthae Adangkip Paathaalam Irangki Moonraam Thinamathilae Iranthorida Ninrae Uyirotu Ezhunthaarenavum Nampukiraen 6. Sandhatha Motsam Ezhundharulich Saruva Valla Paranaana Enthai Thanvala Paarisamae Irukkinraarena Nampukiraen 7. Uyirullorai Maritthorai Utthama Njaayam Theertthidavae Jeyamaayth Thirumba Varuvaarenach Sinthaiyaara Nampukiraen 8. Parisutthaaviyai Nampukiraen Parisuttha Maa Pothucchapaiyum Parisuttharkalin Aikkiyamum Parivaayuntena Nampukiraen 9. Paava Mannippulathenavum Maritthoruyirtthezhu Vaarenavum Ovaa Nitthiya Jeevanumae Ulathenavum Yaan Nampukiraen