பாடல் #42004
ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து
🔤 Aandavar Unnai Aaseervathitthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து அன்பின் சிறகில் காப்பாராக ஆண்டவர் முகமுனில் ஒளிரச் செய்து அமைதியருளி ஆள்வாராக 1. ஆபிராம் போன்றே அனைவருக்கும் ஆசீர்வாதமாய் அமைந்திடுவாய் மாபிரதானம் மாண்புறுதானம் மாநில மீதில் நீ சமாதானம் 2. ஆசி பொழியேல் அகலவிடேன் ஆவலின் ஏங்கல் அருள்வேண்டல் ஆசியடைந்த யாக்கோபு மீண்டும் அன்பாய் ஏசாவுடன் இணையச் செய்த 3. பெண்களுள் மரியாள் ஆசி பெற்றாள் பெண்குல மேன்மை அவள் ஈந்தாள் எண்ணருள் பாடு இன்னல்கள் நேர்ந்தும் எண்ணியே இறையுளம் இசைந்தது போல் 4. இந்தச் சிறியோர்க் கெதைத்தரினும் எனக்கே தருவீர் எனும் இயேசு எந்தையால் ஆசி பெற்றோரே வாரீர் என்றதும் வலதிட மகிழ்வேற்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavar Unnai Aaseervathitthu Anpin Sirakil Kaappaaraaga Aandavar Mugamunil Olirach Seythu Amaithiyaruli Aalvaaraaga 1. Aapiraam Ponrae Anaivarukkum Aaseervaadhamaay Amainthituvaay Maapirathaanam Maanpuruthaanam Maanila Meethil Nee Samaathaanam 2. Aasi Pozhiyael Agalavitaen Aavalin Aenggal Arulvaendal Aasiyataindha Yaakkopu Meentum Anpaay Aesaavudan Inaiyach Seytha 3. Penkalul Mariyaal Aasi Perraal Penkula Maenmai Aval Eenthaal Ennarul Paatu Innalkal Naernthum Enniyae Iraiyulam Isaindhathu Pol 4. Indhach Siriyork Kethaittharinum Enakkae Tharuveer Enum Yesu Enthaiyaal Aasi Perrorae Vaareer Endrathum Valathida Makizhvaerpaay