பாடல் #41999
பயணிகள் பாதையில்
🔤 Payanigal Paathaiyil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயணிகள் பாதையில் பலம் தரும் விருந்து பரமனின் திருவுளம் பார்த்திடும் விருந்து 1. படைப்பதின் அழகு, படைத்தவர் பரிவு பணிந்துமே நன்றிப் படைத்திடும் விருந்து அடிமைகள் உடன் வந்து விடுதலை அருளும் ஆண்டவர் அருள் நினைவாகிடும் விருந்து 2. இறைவனின் அரசதின் முன்சுவை இங்கு இயேசுவின் அடியவர் இணைவதில் தங்கும் குறைகளை மறக்கும் குருவருள் பலிக்கும் குறையிலா முழுமைக்கு வாழ்வது பிறக்கும் 3. ஈவதும் ஏற்பதும் விருந்ததில் பொதுமை இறைவனே தனை இதில் ஈவது புதுமை ஈவதால் என்றும் மறைவது வெறுமை சாவிலே வாழ்வது மலர்வதே இனிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payanigal Paathaiyil Palam Tharum Virunthu Paramanin Thiruvulam Paartthitum Virunthu 1. Pataippathin Azhaku, Pataitthavar Parivu Paninthumae Nanrip Pataitthitum Virunthu Atimaigal Udan Vanthu Vitudhalai Arulum Aandavar Arul Ninaivaakitum Virunthu 2. Iraivanin Arasathin Munsuvai Ingku Yesuvin Atiyavar Inaivathil Thangkum Kuraigalai Marakkum Kuruvarul Palikkum Kuraiyilaa Muzhumaikku Vaazhvathu Pirakkum 3. Eevathum Aerpathum Virundhathil Pothumai Iraivanae Thanai Ithil Eevathu Puthumai Eevathaal Enrum Maraivathu Verumai Saavilae Vaazhvathu Malarvathae Inimai