பாடல் #41996
திருமறையின் மொழிகளிலே
🔤 Thirumaraiyin Mozhigalilae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருமறையின் மொழிகளிலே தேன்வழியும் - அதன் அருள் நிறைந்த உரைகளினால் தீங்கழியும் அறுபத்து ஆறாகும் அதன் மணிகள் - அவை அழியாத அமுதூறும் சுவை கனிகள் ஒருமித்த நோகொன்றே அவை காட்டும் - இந்த உலகோருக் கென்றென்றும் அருள் கூட்டும் இறைமைந்தர் இயேசுவையே எடுத்துரைக்கும் - அதன் ஏடுகளில் அவர் பெயரே எதிரொலிக்கும் நிறைவேறும் பாங்கிலவர் வாழ்வடங்கும் - அதில் நிகழ்கால வரலாற்றின் பொருள் விளங்கும் ஆவியினால் நிறைந்தோராம் அடியார்கள் - அதை அவர் காலச் சூழலிலே வரைந்தார்கள் பூவுலகின் குழல்களின் மறைபேசும் - என்றும் புதுநெறியின் தீபமதாய் ஒளிவீசும் முறையாகத் திருமறையைப் பயின்றிடுவோம் - அதன் முழுப்பொருளை அறிந்திடவே முயன்றிடுவோம் நிறைவான வாழ்வுதனை அடைந்திடவே - மறை நிழல் படியும் பாதையிலே நடந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirumaraiyin Mozhigalilae Thaenvazhiyum - Adhan Arul Niraindha Uraigalinaal Theenggazhiyum Arubatthu Aaraakum Adhan Manigal - Avai Azhiyaadha Amuthoorum Suvai Kanigal Orumittha Nokonrae Avai Kaattum - Indha Ulakoruk Kenrenrum Arul Koottum Iraimaindhar Yesuvaiyae Etutthuraikkum - Adhan Aetugalil Avar Peyarae Ethirolikkum Niraivaerum Paangkilavar Vaazhvatangkum - Athil Nigazhkaala Varalaarrin Porul Vilangkum Aaviyinaal Nirainthoraam Atiyaarkal - Athai Avar Kaalach Soozhalilae Varainthaarkal Poovulakin Kuzhalkalin Maraipaesum - Enrum Puthuneriyin Theebamathaay Oliveesum Muraiyaagath Thirumaraiyaip Payinrituvom - Adhan Muzhupporulai Arinthidavae Muyanrituvom Niraivaana Vaazhvudhanai Atainthidavae - Marai Nizhal Patiyum Paathaiyilae Natanthituvom