பாடல் #41995
நிறைவாய் அருளை
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
நிறைவாய் அருளைப் பெற்றவர் தாம் குறைவாய் பொருள்களைக் காணிக்கையாய் இறைவா படைத்தோம் ஏற்பீரே! துன்பத்தில் இன்பமும் அளிப்பவர் நீர் இன்பத்தைப் பெருக்கி வளர்ப்பவர் நீர் தன்மகன் தந்த தலைவனும் நீர் நன்றிக்கு உரிய நாயகன் நீர். எம்பொருள் உடல் உயிர் அனைத்தையுமே தந்ததன் உட்பொருள் ஆகிடவே நன்றியின் சான்றென இவைகளையே அன்புடன தருகிறோம் உமக்கெனவே காணா உமக்கு தருவது போல் காணும் எங்களுள் பகிர்ந்திடவே தானாய் எழுந்து செயல்படவே தூயாவியினால் எமை தூண்டும்