பாடல் #41993
உண்மையாம் உபவாசம் எது?
🔤 Unmaiyaam Ubavaasam Ethu?
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மையாம் உபவாசம் எது? உண்ணாமல் இருப்பதா அது? உள்ளத்தில் அன்பினையேப் பேணாமல் உடல் தன்னை ஒடுக்கினால் போதுமா? சடங்காக நோன்பினை மேற்கொண்டால் சிந்தையில் மாற்றமே ஆகுமா? உடையின்றி தவித்திடும் ஒருவனுக்கு உடையீந்தால் அதுவன்றோ உபவாசம் தடையின்றி பிறர்க்கு தயைகாட்டி சடைப்பின்றி உழைப்பதே உபவாசம் துன்பத்தில் இருப்போரின் துயரிநீக்கி தனிமையில் வாடினால் துணையாகி எளியோரின் தோழனாய் இணைந்தென்றும் இருப்பதே உள்ளத்தின் உபவாசம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmaiyaam Ubavaasam Ethu? Unnaamal Iruppathaa Athu? Ullatthil Anpinaiyaep Paenaamal Udal Thannai Otukkinaal Pothumaa? Satangkaaga Nonpinai Maerkontaal Sinthaiyil Maartramae Aakumaa? Utaiyinri Thavitthitum Oruvanukku Utaiyeenthaal Athuvanro Ubavaasam Thataiyinri Pirarkku Thayaikaatti Sataippinri Uzhaippathae Ubavaasam Thunbatthil Irupporin Thuyarineekki Thanimaiyil Vaatinaal Thunaiyaaki Eliyorin Thozhanaay Inainthenrum Iruppathae Ullatthin Ubavaasam