பாடல் #41990
ஆழ்த்தியான நிலையதினில்
🔤 Aazhtthiyaana Nilaiyathinil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆழ்த்தியான நிலையதினில் அகம் பொழியும் - நம் ஆண்டவரின் திருவடிகள் அருள் பொழியும் அமர்ந்தே அவர் இறைவன் என அறிவோம் - வெறும் ஆரவார அலையில் அவர் அகப்படமாட்டார் அமர் தென்றல் மெல்தொனியில் அவர் உள்ளார் அகமுறைந்தே ஆண்டு செயல்படுகின்றார் அனுதினமும் அவரடியில் அமர்ந்திருந்தால் - இவண் அழிவில்லா நல்பங்கை அடைந்திடலாம் சுமை வாழ்வே இதுவென்று சோர்புறாமல் - அவர் சுருதி மொழி கருதியே உள் பலம் காண்போம் அமைதியுடன் ஆர்வமதும் ஆழ்ந்திருந்தால் - மெய் அமைதியிலே ஆவியரின் அனல் பெருகும் இமை மூடி இருந்திடினும் மனம் முழங்கும் - நமில் இறையரசு இயங்குவதின் பொருள் விளங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aazhtthiyaana Nilaiyathinil Agam Pozhiyum - Nam Aandavarin Thiruvatigal Arul Pozhiyum Amarnthae Avar Iraivan Ena Arivom - Verum Aaravaara Alaiyil Avar Agappatamaattaar Amar Thendral Melthoniyil Avar Ullaar Agamurainthae Aantu Seyalpatukinraar Anuthinamum Avaratiyil Amarnthirunthaal - Ivan Azhivillaa Nalpangkai Atainthidalaam Sumai Vaazhvae Ithuvenru Sorpuraamal - Avar Suruthi Mozhi Karuthiyae Ul Palam Kaanpom Amaithiyudan Aarvamathum Aazhnthirunthaal - Mey Amaithiyilae Aaviyarin Anal Perukum Imai Mooti Irunthitinum Manam Muzhangkum - Namil Iraiyarasu Iyangkuvathin Porul Vilangkum