பாடல் #41988
உரையாடல் பணியினை
🔤 Uraiyaadal Paniyinai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உரையாடல் பணியினைத் தொடர்ந்திடுவோம் உலகையே இறையன்பில் இணைத்திடுவோம் வரையிடல் இன்றியே உரையாடுவோம் வாய்மைகள் யாவையும் ஏற்றிடுவோம் தொடர்புகள் வளர்ந்திட உரையாடுவோம் தொடர்வோம் இறைமகன் இயேசுவையே இடர்புகள் அகற்றி உரையாடுவோம் இறையரசுலகில் அமைந்திடவே பொருளுள்ள நம்பிக்கை உருவாகிட பொறுப்போடு நாமும் உரையாடுவோம் அருள்நிறை தொழுகைகள் அமைந்திடவே அகமது திறந்தே உரையாடுவோம் அகிலமே ஒன்றாய் இணைந்திடவே அன்புடன் என்றும் உரையாடுவோம் முகில்கள் விலகி தெளிவடைந்து முழுப் பொருள் காண உரையாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uraiyaadal Paniyinaith Thodarnthituvom Ulakaiyae Iraiyanpil Inaitthituvom Varaiyidal Inriyae Uraiyaatuvom Vaaymaigal Yaavaiyum Aerrituvom Thodarpugal Valarnthida Uraiyaatuvom Thodarvom Iraimakan Yesuvaiyae Idarpugal Agarri Uraiyaatuvom Iraiyarasulakil Amainthidavae Porululla Nampikkai Uruvaakida Poruppotu Naamum Uraiyaatuvom Arulnirai Thozhukaigal Amainthidavae Agamathu Thiranthae Uraiyaatuvom Akilamae Onraay Inainthidavae Anpudan Enrum Uraiyaatuvom Mukilkal Vilaki Thelivatainthu Muzhup Porul Kaana Uraiyaatuvom