பாடல் #41987
உரையாடல் பயணமிது
🔤 Uraiyaadal Payanamithu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உரையாடல் பயணமிது விரைந்திடுவோம் உரையாடல் வாழ்வதினில் மகிழ்ந்திடுவோம் உறவாலே உலகொன்றாய் இணைந்திடுமே உலகாளும் இறைவன்பால் சேர்த்திடுமே உரையாடல் உருவாகும் இறையடியில் உரையாடல் ஒருங்கிணையும் திருமறையில் உரையாடல் உயர்வடையும் கிறிஸ்துவினில் உரையாடல் செயலாகும் நம்மிடையில் எப்பெயரில் எம்மனிதர் பிரிந்திடினும் எல்லார்க்கும் இறையவனார் ஒரே ஒருவர் எப்போதும் திறந்தமனம் ஏற்பிருந்தால் எதிர்பாரா புதுமைகள் தினம் நிகழும் நம்பிக்கை தெளிவடையும் உறுதியுறும் நம் நாதர் இயேசன்பு சான்று பெறும் நம்மோரும் எல்லோரும் நலம் பெறுவார் நம் வாழ்வில் உரையாடல் தொடர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uraiyaadal Payanamithu Virainthituvom Uraiyaadal Vaazhvathinil Makizhnthituvom Uravaalae Ulakonraay Inainthitumae Ulakaalum Iraivanpaal Saertthitumae Uraiyaadal Uruvaakum Iraiyatiyil Uraiyaadal Orungkinaiyum Thirumaraiyil Uraiyaadal Uyarvataiyum Kiristhuvinil Uraiyaadal Seyalaakum Nammitaiyil Eppeyaril Emmanidhar Pirinthitinum Ellaarkkum Iraiyavanaar Orae Oruvar Eppothum Thirandhamanam Aerpirunthaal Ethirpaaraa Puthumaigal Thinam Nigazhum Nampikkai Thelivataiyum Uruthiyurum Nam Naadhar Yesanpu Saanru Perum Nammorum Ellorum Nalam Peruvaar Nam Vaazhvil Uraiyaadal Thodarnthituvom