பாடல் #41986
வாழ்வளிக்கின்றார் இயேசு
🔤 Vaazhvalikkinraar Yesu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வளிக்கின்றார் இயேசு வாழ்வளிக்கின்றார் வந்திடும் யாவரும் விந்தையில் மூழ்கிட பாவிகள் என்றாலும் இயேசு பாசமாய் ஏற்கின்றார் பண்புகள் இழந்தவர் பலமுறை விழுந்தவர் பணிவுடன் மனமுடைந்தவரிடம் வந்திடில் ஞானியர் என்றாலும் இயேசு நேசமாய் ஏற்கின்றார் நன்னெறி அறிந்தவர் நடந்திட முயன்றவர் நலம் பெறும் விழைவுடன் அவரிடம் வந்திடில் தேவைகள் உள்ளோரை இயேசு தாவியே ஏற்கின்றார் தம்நிலை உணர்ந்தவர் தளர்வுகள் அடைந்தவர் தலைநிமிர்ந் துயர்ந்திட அவரிடம் வந்திடில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvalikkinraar Yesu Vaazhvalikkinraar Vanthitum Yaavarum Vinthaiyil Moozhkida Paavigal Enraalum Yesu Paasamaay Aerkinraar Panpugal Izhandhavar Palamurai Vizhundhavar Panivudan Manamutaindhavaridam Vanthitil Njaaniyar Enraalum Yesu Naesamaay Aerkinraar Nanneri Arindhavar Natanthida Muyandravar Nalam Perum Vizhaivudan Avaridam Vanthitil Thaevaigal Ullorai Yesu Thaaviyae Aerkinraar Thamnilai Unarndhavar Thalarvugal Ataindhavar Thalainimirn Thuyarnthida Avaridam Vanthitil