பாடல் #41983
இனிக்காத தேனுமில்லை மின்னாத
🔤 Inikkaadha Thaenumillai Minnaadha
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிக்காத தேனுமில்லை மின்னாத பொன்னுமில்லை கிறிஸ்தேசு நாயகரின் - நற்செய்திதன்னை அறிவிக்காம கிறிஸ்தவனேயில்லை கத்தியழைச்சி மொத்தமாக் கூடி காக்கைகள் உண்பதுபோல் - நாம் பெத்த இன்பத்தை மத்தவரோட பகிர்ந்தளிக்கணுந்தானே உப்பத்த மீன்குழம்பு குப்பைக்கு போவதுபோல் அப்பன் கிறிஸ்தையனின் - நற்செய்தி தன்னை அறிவிக்காம கிறிஸ்தவனேயில்லை பெத்துவளத்து பத்துங் கொடுத்து உத்தமங்கப் பத்திச் சொல்ல - நாம் வெக்கத்தை கொண்டா அக்கம் பக்கத்தார் துப்பிச்சிரித்திடுவாங்க பத்துக்கோடி பெத்தவங்க மொத்த அன்பை கூட்டினாலும் உத்தமரின் அன்பாகுமோ - அதை சொல்லமறந்தா உசிரில்லாத வெறும் பொணமா ஆவானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inikkaadha Thaenumillai Minnaadha Ponnumillai Kiristhaesu Naayakarin - Narseythidhannai Arivikkaama Kiristhavanaeyillai Katthiyazhaichsi Motthamaak Kooti Kaakkaigal Unpathupol - Naam Pettha Inbatthai Matthavaroda Pakirndhalikkanunthaanae Uppattha Meenkuzhampu Kuppaikku Povathupol Appan Kiristhaiyanin - Narseythi Thannai Arivikkaama Kiristhavanaeyillai Petthuvalatthu Patthung Kotutthu Utthamanggap Patthich Solla - Naam Vekkatthai Kontaa Akkam Pakkatthaar Thuppichsiritthituvaangga Patthukkoti Petthavangga Mottha Anpai Koottinaalum Utthamarin Anpaakumo - Athai Sollamaranthaa Usirillaadha Verum Ponamaa Aavaanae