பாடல் #41982
இறைவனே உன்னைப்
🔤 Iraivanae Unnaip
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவனே உன்னைப்
பாடிப் புகழ்ந்திட
அருள்வாய் - ஏழிசையாலே!
முறை தவறாமல்
குறைகளில்லாமல்
முத்தமிழ் மாலையில்
மோனை கெடாமல் - இறைவனே
உதயத்திலே ஒளி
உதிக்குமுன்னே எழுந்து
இதயத்தையே நீயே
இருப்பதற்குத் திறந்து,
சிரத்தினையே உன்றன்
சேவடியில் பிணித்து,
கரத்தினையே குவித்துக்
கண்களில் நீர்வடித்து - இறைவனே
அற்புதமாகவே அகண்ட வெளியிலே
ஆயிரங்கோடி அண்டங்களைப் படைத்து,
புற்புதங்கள்போலப்
பொற்புடனே மிதந்து
போகவிட்டு அவற்றைப்
புரந்தருள் செய்கிற - இறைவனே
தந்தையென அமைந்து
தாயுமெனச் சிறந்து,
விந்தையின் ஆவியால்
வித்தங்கள் புரிந்து,
மைந்தனையே கொடுத்து
மானிடத்தைப் பிணித்த
பந்தங்களை யறுத்துப்
பாரினிலே விடுத்த - இறைவனே
4 காலையிலே பகல்
காலத்திலே இன்ப
மாலையிலே மற்ற
மையிருள் போதிலே
சோலையிலே துயர்ப்
பாலையிலே இந்த
ஞாலத்திலே வரும்
வாழ்விலே தாழ்விலே
- இறைவனே
"
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivanae Unnaip
Paatip Pugazhnthida
Arulvaay - Aezhisaiyaalae!
Murai Thavaraamal
Kuraigalillaamal
Mutthamizh Maalaiyil
Monai Ketaamal - Iraivanae
Udhayatthilae Oli
Uthikkumunnae Ezhunthu
Idhayatthaiyae Neeyae
Iruppatharkuth Thiranthu,
Siratthinaiyae Undran
Saevatiyil Pinitthu,
Karatthinaiyae Kuvitthuk
Kankalil Neervatitthu - Iraivanae
Arpudhamaagavae Aganda Veliyilae
Aayirangkoti Andanggalaip Pataitthu,
Purpudhanggalpolap
Porpudanae Midhanthu
Pogavittu Avarraip
Purandharul Seykira - Iraivanae
Thanthaiyena Amainthu
Thaayumenach Siranthu,
Vinthaiyin Aaviyaal
Vitthanggal Purinthu,
Maindhanaiyae Kotutthu
Maanidatthaip Pinittha
Pandhanggalai Yarutthup
Paarinilae Vituttha - Iraivanae
4 Kaalaiyilae Pakal
Kaalatthilae Inba
Maalaiyilae Martra
Maiyirul Pothilae
Solaiyilae Thuyarp
Paalaiyilae Indha
Njaalatthilae Varum
Vaazhvilae Thaazhvilae
- Iraivanae
"