பாடல் #41981
இனிக்கும் தமிழினில் இயேசுவைப் பாடுவேன்
🔤 Inikkum Thamizhinil Yesuvaip Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனிக்கும் தமிழினில் இயேசுவைப் பாடுவேன் இதயக் கனிவுடன் இசைமலர் தொடுப்பேன் எளியவன் நானும் இறைபுக ழுரைப்பேன் எல்லாப் பண்ணிலும் இயேசுவை இணைப்பேன் மரிஉப தேசிகர் மறைஞா சாமுவேல் பெரியண்ணன் மற்றும் பால்மருடனே அரியராம் பரமானந்தர் பாடிய - இனிக்கும் மறைமுதற் கலைஞரும் மீட்புக் கவிஞரும் குறைவில்லாப் புலவர் சந்தி யாகரும் நிறைமொழி மாசில் மணியரும் பாடிய - இனிக்கும் வேதக் கண்ணரும் வீர முனிவரும் போதகர் வேத நாயக ருடனே மேதை யோசேப் பண்ணலும் பாடிய - இனிக்கும் ஆபிராம் கலைஞரும் காபிரி யேலரும் தாவீது ஐயர் தைரியம் எழுத்தர் பாவலர் பலரும் பயின்று பாடிய - இனிக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inikkum Thamizhinil Yesuvaip Paatuvaen Idhayak Kanivudan Isaimalar Thotuppaen Eliyavan Naanum Iraipuga Zhuraippaen Ellaap Pannilum Yesuvai Inaippaen Mariuba Thaesigar Marainjaa Saamuvael Periyannan Marrum Paalmarudanae Ariyaraam Paramaanandhar Paatiya - Inikkum Maraimudhar Kalainjarum Meetpuk Kavinjarum Kuraivillaap Pulavar Santhi Yaagarum Niraimozhi Maasil Maniyarum Paatiya - Inikkum Vaedhak Kannarum Veera Munivarum Podhakar Vaedha Naayaka Rudanae Maethai Yosaep Pannalum Paatiya - Inikkum Aapiraam Kalainjarum Kaapiri Yaelarum Thaaveethu Aiyar Thairiyam Ezhutthar Paavalar Palarum Payinru Paatiya - Inikkum