பாடல் #41980
பெண்கள் ஐக்கிய சங்க
🔤 Penkal Aikkiya Sangga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெண்கள் ஐக்கிய சங்க கொடி வானில் பேரொளி வீசியே பறக்குது பார்! நீல வானில் நிலவொளி போல் - பெரும் ஆழ் கடல் மேல் ஐக்கிய சங்கம் - பெண்கள் காலை சூரியன் கதிருடனெழுந்து மாலை படிந்திருள் மடித்திடுமாம் மேலே சிலுவையின் மீட்புகதிர் - தங்க மாலையென பெண்கள் இணைந்திடவே - செய்யும் - பெண்கள் சத்திய வசனம் நித்திய போசனம் உத்தம ஜெபமே உணர்ந்திடவே பக்தி உபவாசம் மெய் விசுவாசத்துடன் முக்தியே பெற முழுமையும் உழைக்க - பெண்கள் பெண்களே! ஐக்கிய சங்கக் கொடியின்கீழ் பண்புடன் அன்புடன் கூடிடுவீர்! மன்பதையாளும் அன்பின் தந்தை அவரின் இயேசு மைந்தனோ டாவியைத் தொழுதிட - பெண்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Penkal Aikkiya Sangga Koti Vaanil Paeroli Veesiyae Parakkuthu Paar! Neela Vaanil Nilavoli Pol - Perum Aazh Katal Mael Aikkiya Sanggam - Penkal Kaalai Sooriyan Kathirudanezhunthu Maalai Patinthirul Matitthitumaam Maelae Siluvaiyin Meetpugathir - Thangga Maalaiyena Penkal Inainthidavae - Seyyum - Penkal Satthiya Vasanam Nitthiya Posanam Utthama Jebamae Unarnthidavae Pakthi Ubavaasam Mey Visuvaasatthudan Mukthiyae Pera Muzhumaiyum Uzhaikka - Penkal Penkalae! Aikkiya Sanggak Kotiyinkeezh Panpudan Anpudan Kootituveer! Manbathaiyaalum Anpin Thanthai Avarin Yesu Maindhano Taaviyaith Thozhuthida - Penkal