பாடல் #41979
உழைப்பாளச் செல்வங்களே
🔤 Uzhaippaalach Selvanggalae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உழைப்பாளச் செல்வங்களே - நீங்கள் இளைப்பாற வாருங்களே - என்னண்டை உழைப்பாளச் செல்வங்களே களைப்பாள ராகநீர் கங்குல் பகலாகக் கடினமாய் உழைத்தபின் கவலைகள் மாற்றிட - உழைப் 1.வசதியாய் வாழ்வார்க்கு மாளிகை அமைக்கின்றீர் வண்ண மலர்ச் சோலை வளர்த்துக் கொடுக்கின்றீர் அசதியைப் போக்கியே ஆறுதல் அளிப்பவர் ஆருண்டு பூமியில் ஆண்டவன் யானின்றி - உழைப் 2. உண்ணும் பொருளுங்கள் உழைப்பாலே விளைந்தது உடையுடன் நகைகளும் உபயோகப் பொருள்களும் எண்ணிக்கை இல்லாமல் உலகோர்க்குச் செய்திட்டீர் இதயத்தின் பாரத்தை எவரிடம் இறங்குவீர் - உழைப் 3. ஆலையின் அனலிலே ஆக்கையை இளக்குவீர் ஆதவன் வெயிலிலே வேர்வையில் அழுங்குவீர் நூலறி வோடுங்கள் நுண்ணறி வாலென்றும் நொந்துநீர் உழைக்கின்றீர் நோயையார் தீர்ப்பவர் - உழைப் 4. மானுடர் சுகவாழ்வு வாழவே உழைக்கின்றீர் மனதுக்குத் தேறுதல் ஆறுதல் தருவோர்யார்? ஊனுடல் சோர்ந்தாலும் உள்ளத்தில் சோராதீர் உம்முடன் இருப்பேன் நான் ஒருபோதும் கைவிடேன் - உழைப்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uzhaippaalach Selvanggalae - Neenggal Ilaippaara Vaarunggalae - Ennantai Uzhaippaalach Selvanggalae Kalaippaala Raaganeer Kangkul Pakalaagak Katinamaay Uzhaitthapin Kavalaigal Maarrida - Uzhaip 1.vasathiyaay Vaazhvaarkku Maalikai Amaikkinreer Vanna Malarch Solai Valartthuk Kotukkinreer Asathiyaip Pokkiyae Aarudhal Alippavar Aaruntu Poomiyil Aandavan Yaaninri - Uzhaip 2. Unnum Porulunggal Uzhaippaalae Vilaindhathu Utaiyudan Nakaigalum Ubayogap Porulkalum Ennikkai Illaamal Ulakorkkuch Seythitteer Idhayatthin Paaratthai Evaridam Irangkuveer - Uzhaip 3. Aalaiyin Analilae Aakkaiyai Ilakkuveer Aadhavan Veyililae Vaervaiyil Azhungkuveer Noolari Votunggal Nunnari Vaalenrum Nonthuneer Uzhaikkinreer Noyaiyaar Theerppavar - Uzhaip 4. Maanudar Sugavaazhvu Vaazhavae Uzhaikkinreer Manathukkuth Thaerudhal Aarudhal Tharuvoryaar? Oonudal Sornthaalum Ullatthil Soraatheer Ummudan Iruppaen Naan Orupothum Kaivitaen - Uzhaip