பாடல் #41977
பிறர் வாழ வேண்டுமெனில்
🔤 Pirar Vaazha Vaentumenil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறர் வாழ வேண்டுமெனில் நான் சாக வேண்டும் நான் சாக வேண்டுமெனில் அவர் வாழ வேண்டும் எனில் இயேசு தினம் வாழவேண்டும் 1. நான் என்னும் ஆணவத்தால் நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன் பிறர் வாழ்வை எண்ணாமல் பாதையில் மயங்கி நின்றேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 2. மற்றவர்கள் மனம் மகிழ மன்னவனே நீ மரித்தாய் மற்றவர்கள் மனம் நோக மதியிழந்து நான் இருந்தேன் இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் 3. உலகுக்காய் நான் வாழ ஒரு மனது துடிக்கையிலே உள்ளுக்குள் கறைபட்ட மறுமனது மறுத்ததையா இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pirar Vaazha Vaentumenil Naan Saaga Vaentum Naan Saaga Vaentumenil Avar Vaazha Vaentum Enil Yesu Thinam Vaazhavaentum 1. Naan Ennum Aanavatthaal Naalellaam Vaazhnthirunthaen Pirar Vaazhvai Ennaamal Paathaiyil Mayangki Ninraen Inrae Ennai Arppanam Seythituvaen 2. Martravarkal Manam Makizha Mannavanae Nee Maritthaay Martravarkal Manam Noga Mathiyizhanthu Naan Irunthaen Inrae Ennai Arppanam Seythituvaen 3. Ulakukkaay Naan Vaazha Oru Manathu Thutikkaiyilae Ullukkul Karaibatta Marumanathu Marutthathaiyaa Inrae Ennai Arppanam Seythituvaen