பாடல் #41976
தத்தமாய்த் தந்தேன் எந்தனையே
🔤 Thatthamaayth Thanthaen Endhanaiyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தத்தமாய்த் தந்தேன் எந்தனையே நித்தமும் உந்தனின் சேவைக்கே 1.துட்டனாய் அலைந்து பாவி நானே கட்டளை யாவையும் மீறினேனே பட்டமா பாடுகள் போதுமென்றே கிட்டி உம் பாதமே வந்து நின்றே 2. எந்தனின் உள்ளத்தில் ஆட்சிசெய்வீர் சிந்தின இரத்தத்தால் சுத்தம் செய்வீர் எந்த இடத்திலும் எந்நேரமும் எந்தனின் சாட்சியாய் நின்றிடவே 3. நீர்தந்த வேலையை நித்தமும் நான் நேர்மையாய்ச் செய்திட சக்தி ஈவீர் ஏழ்மையில் ஏங்கிடும் மக்களுக்கு தாழ்மையாய்த் தொண்டு நான் செய்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thatthamaayth Thanthaen Endhanaiyae Nitthamum Undhanin Saevaikkae 1.thuttanaay Alainthu Paavi Naanae Kattalai Yaavaiyum Meerinaenae Pattamaa Paatugal Pothumenrae Kitti Um Paadhamae Vanthu Ninrae 2. Endhanin Ullatthil Aatsiseyveer Sinthina Ratthatthaal Suttham Seyveer Endha Idatthilum Ennaeramum Endhanin Saatsiyaay Ninridavae 3. Neerthandha Vaelaiyai Nitthamum Naan Naermaiyaaych Seythida Sakthi Eeveer Aezhmaiyil Aengkitum Makkalukku Thaazhmaiyaayth Thontu Naan Seythidavae