பாடல் #41974
கோடையில் வாடும்மான்
🔤 Kotaiyil Vaatummaan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடையில் வாடும்மான் ஓடைமேல் வேட்கையாய் ஓடியே ஓலமிட் டோயுதல் போல் நாடி என் ஆத்துமம் ஆண்டவர் மீதென்றும் நாட்டமுற் றோலமிட்டுலைகின்ற தே வேந்தன்மேல் ஆறாத வேட்கையே உடையேன் விள்ளரும் திருமுன் என்றடைவேன் மாந்தர்கள் உன் இறை என்றுனைக் காப்பாரோ என்றேச என் கண்ணீர் உணவானதே பேரின்ப வாழ்த்தொடும் ஆர்ப்பொடும் பண்டிகைக் கோர் பெரும் கூட்டத்தை நான் நடத்திச் சீரிய கோயிலுள் சேர்த்ததை எண்ணுங்கால் சிந்தைஎல் லாமுள்ளே சேர்ந் துருகும் ஆண்டவர் உனைமறந் தார் எனக் கலங்கா தான்மாவே காத்திரு, ஆண்டவர் க்காய் மீண்டும் விழாக்கண்டு போற்றுவேன் கலங்கேல் மீட்பரின் மீதென்றும் நம்பகம்பூண் அருவியின் பேரின்ப ஆர்ப்பரிப் போங்கிட ஆழியை ஆழி அழைக்கின்றதே பெருகிடும் அலைகளும் திரைகளும் என்மேலே போர்த்தும், புரண்டெழுந்தோடுவன பகலிலே மாறாத பேரன்பைப் பெய்கின்றீர் இரவெல்லாம் வான்புகழ் வாய்பாடும் நிகரில்லா மாமலை ஆகிய நேயனே நின்திரு வேளைக்காய் காத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kotaiyil Vaatummaan Otaimael Vaetkaiyaay Otiyae Olamit Toyudhal Pol Naati En Aatthumam Aandavar Meethenrum Naattamur Rolamittulaikindra Thae Vaendhanmael Aaraadha Vaetkaiyae Utaiyaen Villarum Thirumun Endrataivaen Maandharkal Un Irai Enrunaik Kaappaaro Enraesa En Kanneer Unavaanathae Paerinba Vaazhtthotum Aarppotum Pantikaik Kor Perum Koottatthai Naan Natatthich Seeriya Koyilul Saertthathai Ennungkaal Sinthaiel Laamullae Saern Thurukum Aandavar Unaimaran Thaar Enak Kalangkaa Thaanmaavae Kaatthiru, Aandavar Kkaay Meentum Vizhaakkantu Porruvaen Kalangkael Meetparin Meethenrum Nambakampoon Aruviyin Paerinba Aarpparip Pongkida Aazhiyai Aazhi Azhaikkindrathae Perukitum Alaigalum Thiraigalum Enmaelae Portthum, Purantezhunthotuvana Pakalilae Maaraadha Paeranpaip Peykinreer Iravellaam Vaanpugazh Vaaypaatum Nigarillaa Maamalai Aakiya Naeyanae Ninthiru Vaelaikkaay Kaatthiruppaen