பாடல் #41973
ஆண்டோரென் ஆயராய்
🔤 Aantoren Aayaraay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டோரென் ஆயராய் ஆளும் போதே அனுகுமோ ஓர்குறை என்மீதே. மாண்பொருள் மாமலை மேய்த்திருப்பார் மாசில்லா நீர்நிலை சேர்த்தருள்வார் தழைத்திடத் தம்முயிர் பொழிந்தருள் வார் தனதரும் தகைமையில் அழைத்தணைப் பார் அழைத்தெனை அருள்நெறிப் படுத்துகின்றார் அருள்கனிந் தென்றுமே நடத்துகின்றார் சாவிருள் ஆழ்கெவி இறங்கிடினும் சாடிடும் தீமைக்கும் நான் அஞ்சிடேன் தேவரென் னோடிருந் தாற்றுகின்றார் திகழ்தடி கோலினால் தேற்றுகின்றார் இறைவனின் வீட்டினில் நிலைத்திருப்போம் என்றென்றும் இன்பமே களித்திருப்போம் நறுமண நெய்ஆடல் மிகுந்தளித்தார் நலம் பொங்கப் பகைவர் முன் விருந்தமைத்தார் மனமெனும் நன்கலம் நிரம்பியதே மகிழின்ப மங்கலம் பொங்கியதே எனைத் தொடர்ந்தே நன்மை இரக்கமுமே என்றுமே உடன்வரும் பெருக்கமுமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aantoren Aayaraay Aalum Pothae Anukumo Orkurai Enmeethae. Maanporul Maamalai Maeytthiruppaar Maasillaa Neernilai Saerttharulvaar Thazhaitthidath Thammuyir Pozhindharul Vaar Thanatharum Thakaimaiyil Azhaitthanaip Paar Azhaitthenai Arulnerip Patutthukinraar Arulkanin Thenrumae Natatthukinraar Saavirul Aazhkevi Irangkitinum Saatitum Theemaikkum Naan Anjsitaen Thaevaren Notirun Thaarrukinraar Thigazhthati Kolinaal Thaerrukinraar Iraivanin Veettinil Nilaitthiruppom Enrenrum Inbamae Kalitthiruppom Narumana Neyaadal Mikundhalitthaar Nalam Ponggap Pakaivar Mun Virundhamaitthaar Manamenum Nankalam Nirampiyathae Makizhinba Manggalam Pongkiyathae Enaith Thodarnthae Nanmai Irakkamumae Enrumae Udanvarum Perukkamumaay