பாடல் #41972
அடியார் உமைவந் தடைந்தனரே
🔤 Atiyaar Umaivan Thataindhanarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடியார் உமைவந் தடைந்தனரே அழியார் வாழ்வினில் உயர்ந்தனரே. தடைகள் யாவையும் தகர்த்தோடி தனிப்பெருஞ் செல்வம் தனைநாடி. கிறிஸ்துவுக்காக வாழ்ந்தோராய் கிறிஸ்துவின் சாயலை நயந்தோராய் திருப்பணி விரைந்தே புரிந்தோராய் திருமறை சார்ந்தே சிறந்தோராய் - அடியார் திருச்சபைக்காக உழைத்தோராய் தினந்தினம் துன்பம் சகித்தோராய் சிறுமைகள் ஏற்றே மகிழ்ந்தோராய் சிலுவையை உலகினில் சுமந்தோராய் - அடியார் தலைமுறை வருவோர் தமக்கெல்லாம் தகுநெறி காட்டிச் சென்றனரே பலராம் சாட்சிகளுடன் சேர்ந்தார் பணிசெய்ய எம்மை ஏவுகின்றார் - அடியார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atiyaar Umaivan Thataindhanarae Azhiyaar Vaazhvinil Uyarndhanarae. Thataigal Yaavaiyum Thakartthoti Thanipperunj Selvam Thanainaati. Kiristhuvukkaaga Vaazhnthoraay Kiristhuvin Saayalai Nayanthoraay Thiruppani Virainthae Purinthoraay Thirumarai Saarnthae Siranthoraay - Atiyaar Thirucchapaikkaaga Uzhaitthoraay Thinanthinam Thunbam Sakitthoraay Sirumaigal Aerrae Makizhnthoraay Siluvaiyai Ulakinil Sumanthoraay - Atiyaar Thalaimurai Varuvor Thamakkellaam Thakuneri Kaattich Sendranarae Palaraam Saatsigaludan Saernthaar Paniseyya Emmai Aevukinraar - Atiyaar