பாடல் #41970
மரணமே உன் கூர் எங்கே
🔤 Maranamae Un Koor Engkae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரணமே உன் கூர் எங்கே? மரணமே, உன் ஜெயம் எங்கே? மரணத்தின் அவலத்தை மனு-பரன் இயேசு மரித்துயிர்த்தெழுந்ததால் மடங்கடித்தார் அழகிய கல்லறை அரசதின் முத்திரை அன்பரை அடக்கிட இயலவில்லை பழகிய சீடர் பரமனின் நண்பர் பார்த்தனர் உயிர்த்தவர் திருவுருவை - மரணமே இயேசுவை இறைவன் எழும்பிடச் செய்தார் என்றுமே இதற்கு சாட்சிகள் நாம் இருளதில் மரண சங்கிலிச் சிறைகள் எங்கிருந்தாலும் எதிர்த்தொடிப்போம் - மரணமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maranamae Un Koor Engkae? Maranamae, Un Jeyam Engkae? Maranatthin Avalatthai Manu-paran Yesu Maritthuyirtthezhundhathaal Matanggatitthaar Azhakiya Kallarai Arasathin Mutthirai Anbarai Adakkida Iyalavillai Pazhakiya Seedar Paramanin Nanpar Paartthanar Uyirtthavar Thiruvuruvai - Maranamae Yesuvai Iraivan Ezhumpidach Seythaar Enrumae Idharku Saatsigal Naam Irulathil Marana Sangkilich Siraigal Engkirunthaalum Ethirtthotippom - Maranamae