பாடல் #41969
உயிர்த்தெழுந்த ஆண்டவர்
🔤 Uyirtthezhundha Aandavar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்த ஆண்டவர் உலகை வென்றவர் உள்ளம் சோரும் வேளை வந்து உதவிசெய்பவர் - உயிர்த் முடிந்தது இவ்வாழ்வு என்னும் முன்னை பயம் வேண்டாம் முடிவில் தொடரும் துளிரில் வாழ்வின் புதுமை பின் காண்போம் - உயிர்த் மரணம் கண்டோர் மறைந்தார் என்ற மனதுக்கம் வேண்டாம் மரணம் வென்ற மன்னர் இயேசு நம்மோடிருக்கிறார் - உயிர்த் கல்லறையே கடைசி வீடு என்ற நிலை வேண்டாம் கல் புருண்ட காட்சிதனைக் கணமே எண்ணுவோம் - உயிர்த் புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளதில் புவியின் கண்கீர் கவலை நோவு சாவு ஓய்ந்திடும் - உயிர்த்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhundha Aandavar Ulakai Vendravar Ullam Sorum Vaelai Vanthu Udhaviseypavar - Uyirth Mutindhathu Ivvaazhvu Ennum Munnai Payam Vaentaam Mutivil Thodarum Thuliril Vaazhvin Puthumai Pin Kaanpom - Uyirth Maranam Kantor Marainthaar Endra Manathukkam Vaentaam Maranam Vendra Mannar Yesu Nammotirukkiraar - Uyirth Kallaraiyae Kataisi Veetu Endra Nilai Vaentaam Kal Purunda Kaatsidhanaik Kanamae Ennuvom - Uyirth Puthiya Vaanam Puthiya Poomi Thonrum Naalathil Puviyin Kankeer Kavalai Novu Saavu Oynthitum - Uyirth