பாடல் #41968
நம்புகின்றாயா நம்புகின்றாயா?
🔤 Nampukinraayaa Nampukinraayaa?
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம்புகின்றாயா நம்புகின்றாயா? கர்த்தரின் புய வலிமை ...யை ... நீ .. இளங்கிளையைப் போலவே வரண்ட நிலத்திலே துளிர்கிற வேர்ப்போல எழுந்து வருகிறார் - நம்பு புறக்கணிக்கப்படடுத் துயரம் நிறைந்து பாடுகள் அனுபவித்தார் அவரை விட்டு நமது முகங்களை நாம் மறைத்து அவரை மறந்திருந்தோம் அவர் மறக்கவில்லை - நம்பு மெய்யாய் அவர் நமது பாடுகளை ஏற்றார் துயரங்களைச் சுமந்தார் நம்முடைய பாவச்செயல்களை அவர் சுமந்தார் அவரது தழும்புகளால் அமைதி பெறுகிறோம் - நம்பு ஆடுகளைப் போல வழி தவறித் திரிந்து அவரவர் வழி போனோம் கர்த்தரே நம்முடைய அக்கிரமங்களை எல்லாம் அவர்மேல் விழச் செய்தார் அடியார்களைக் காத்தார் - நம்பு தமது ஆன்மாவை மரணத்திலே ஊற்றித் தாமே பலியானார் அவர் தமது ஆன்மா வருந்திய தோர் பலனை அவனியிலே காண்பார் கண்டு மகிழ்ந்திடுவார் - நம்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nampukinraayaa Nampukinraayaa? Karttharin Puya Valimai ...yai ... Nee .. Ilangkilaiyaip Polavae Varanda Nilatthilae Thulirkira Vaerppola Ezhunthu Varukiraar - Nampu Purakkanikkappatatuth Thuyaram Nirainthu Paatugal Anubavitthaar Avarai Vittu Namathu Muganggalai Naam Maraitthu Avarai Maranthirunthom Avar Marakkavillai - Nampu Meyyaay Avar Namathu Paatugalai Aerraar Thuyaranggalaich Sumanthaar Nammutaiya Paavachseyalkalai Avar Sumanthaar Avarathu Thazhumpugalaal Amaithi Perukirom - Nampu Aatugalaip Pola Vazhi Thavarith Thirinthu Avaravar Vazhi Ponom Karttharae Nammutaiya Akkiramanggalai Ellaam Avarmael Vizhach Seythaar Atiyaarkalaik Kaatthaar - Nampu Thamathu Aanmaavai Maranatthilae Oorrith Thaamae Paliyaanaar Avar Thamathu Aanmaa Varunthiya Thor Palanai Avaniyilae Kaanpaar Kantu Makizhnthituvaar - Nampu