பாடல் #41967
ஒன்றே எனக்குப் பெருமை
🔤 Onrae Enakkup Perumai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றே எனக்குப் பெருமை - அது உலகின் மீட்பர் சிலுவை! அன்பின் சிலுவை முன்னே - என்றன் அனைத்தும் வெறுமை வீணே! சிறுமை பெருமை இரண்டும் - இயேசு சிலுவை யதனில் விளங்கும் சிறுமையில் பெருமை சேரும் - இல்லை சிறுமையே பெருமை ஆகும்! இழிவும் இழப்பும் நலமே - என்று இயம்பும் சிலுவை தினமே! அழிவிலே வாழ்வு தோன்றும் - அது அழிவிலா வாழிவாய் ஓங்கும் என்னைச் சிலுவை மீதே - நான் அறைந்தேன் இயேசுவோடே மண்ணின் இன்பம் யாவும் - அதில் மடிந்தே அழிந்து போகும்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrae Enakkup Perumai - Athu Ulakin Meetpar Siluvai! Anpin Siluvai Munnae - Endran Anaitthum Verumai Veenae! Sirumai Perumai Irantum - Yesu Siluvai Yathanil Vilangkum Sirumaiyil Perumai Saerum - Illai Sirumaiyae Perumai Aakum! Izhivum Izhappum Nalamae - Enru Iyampum Siluvai Thinamae! Azhivilae Vaazhvu Thonrum - Athu Azhivilaa Vaazhivaay Ongkum Ennaich Siluvai Meethae - Naan Arainthaen Yesuvotae Mannin Inbam Yaavum - Athil Matinthae Azhinthu Pokum!