பாடல் #41966
சிலுவையில் நின்றெழுந்த
🔤 Siluvaiyil Ninrezhundha
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல் - நம்மை சீராக்கி நேராகும் மன்னன் குரல் மன்னிப்பின் குரலினையே முதலெழுப்பி மாந்தர் தம் பாவத்தை போக்கிவிட்டார் மீட்பின் குரலினையே பிறகெழுப்பி மாபெரும் கள்வனுக்கு வாழ்வளித்தார் (2) பாசத்தின் குரல்தன்னை பார்த்திபனும் பார்போற்றும் மரியாளுக்கு வழங்கி நின்றார் உயிரூட்டும் தந்தையின் கரம்பிடித்து உறுதியின் குரலினையே எழுப்பி நின்றார் (2) நல்நீரை நான் தருவேன் என்றவரோ நாவறள தாகத்தின் குரலெழுப்பி முடிந்தது முடிந்தது எனக்கூறி முழுமையின் குரலினையே முழக்கி நின்றார் (2) தந்தையின் கரங்களில் தன துயிரை தருகிறேன் எனவெற்றிக் குரலெழுப்பி தலை சாய்ந்து உயிர்நீத்த இயேசுபிரான் தலைவராய் உயிர்த்தெழுந்து ஆளுகிறார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyil Ninrezhundha Anpin Kural - Nammai Seeraakki Naeraakum Mannan Kural Mannippin Kuralinaiyae Mudhalezhuppi Maandhar Tham Paavatthai Pokkivittaar Meetpin Kuralinaiyae Pirakezhuppi Maaperum Kalvanukku Vaazhvalitthaar (2) Paasatthin Kuralthannai Paartthibanum Paarporrum Mariyaalukku Vazhangki Ninraar Uyiroottum Thanthaiyin Karampititthu Uruthiyin Kuralinaiyae Ezhuppi Ninraar (2) Nalneerai Naan Tharuvaen Endravaro Naavarala Thaagatthin Kuralezhuppi Mutindhathu Mutindhathu Enakkoori Muzhumaiyin Kuralinaiyae Muzhakki Ninraar (2) Thanthaiyin Karanggalil Thana Thuyirai Tharukiraen Enaverrik Kuralezhuppi Thalai Saaynthu Uyirneettha Yesupiraan Thalaivaraay Uyirtthezhunthu Aalukiraar (2)