பாடல் #41963
இறையடி தினம் வரும் அடியவராய்
🔤 Iraiyati Thinam Varum Atiyavaraay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறையடி தினம் வரும் அடியவராய் மறை பயில்வது தரும் நிறைமகிழ்வே இறையியல் அறிவதில் துணிபவராய் குறையற செயல் படல் இறைபணியே அன்புடன் அறிவும் அமைந்திருந்தால் ஆண்டவர் பணியதில் வளர்ந்திடலாம் துன்புறும் நேரமும் துதியிருந்தால் தூயனின் சேவையில் துணிந்திடலாம் உணர்வுடன் உண்மையும் இணைந்திருந்தால் உண்மையில் உணர்வுகள் உயர்வடையும் உணர்ந்துமே மனு வெல்லாம் ஒருங்கிணைந்தால் உலகினில் ஓரிறை அரசமையும் சொல்லுடன் செயலும் சேர்ந்திருந்தால் சொல்லிடும் செய்தியில் மெருகமையும் வல்லவர் இயேசுவின் வழி நடந்தால் வல்லமை வாழ்வெல்லாம் வந்தமையும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraiyati Thinam Varum Atiyavaraay Marai Payilvathu Tharum Niraimakizhvae Iraiyiyal Arivathil Thunibavaraay Kuraiyara Seyal Patal Iraibaniyae Anpudan Arivum Amainthirunthaal Aandavar Paniyathil Valarnthidalaam Thunpurum Naeramum Thuthiyirunthaal Thooyanin Saevaiyil Thuninthidalaam Unarvudan Unmaiyum Inainthirunthaal Unmaiyil Unarvugal Uyarvataiyum Unarnthumae Manu Vellaam Orungkinainthaal Ulakinil Orirai Arasamaiyum Solludan Seyalum Saernthirunthaal Sollitum Seythiyil Merugamaiyum Vallavar Yesuvin Vazhi Natanthaal Vallamai Vaazhvellaam Vandhamaiyum