பாடல் #41960
ஆவியில் எளியோர்
🔤 Aaviyil Eliyor
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியில் எளியோர் பேறடைந்தோர் ஆண்டவர் அரசே அவரடைவார் துயருறுவோர் நல் பேறடைந்தோர் துயர் நீங்கி ஆறுதல் அவரடைவார் பணிவில் உயர்ந்தோர் பேறடைந்தோர் பாருலகில் அவர் பங்கடைவார் நீதியின் மேல் பசிதாகங் கொண்டோர் நிறைவினைக் காணும் பேறடைந்தோர் இரங்கிடும் இயல்போர் பேறடைந்தோர் இரக்கமே என்றும் அவர் பெறுவார் இதயத்தில் தூயோர் பேறடைந்தோர் இறைவனை என்றும் அவர் காண்பார் அமைதியை அமைப்போர் பேறடைந்தோர் ஆண்டவர் குழந்தைகள் அவராவார் நீதிக்காய் துன்புறுவோர் பேறடைந்தோர் நீதி விண்ணரசே அவர் அடைவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyil Eliyor Paeratainthor Aandavar Arasae Avarataivaar Thuyaruruvor Nal Paeratainthor Thuyar Neengki Aarudhal Avarataivaar Panivil Uyarnthor Paeratainthor Paarulakil Avar Panggataivaar Neethiyin Mael Pasithaagang Kontor Niraivinaik Kaanum Paeratainthor Irangkitum Iyalpor Paeratainthor Irakkamae Enrum Avar Peruvaar Idhayatthil Thooyor Paeratainthor Iraivanai Enrum Avar Kaanpaar Amaithiyai Amaippor Paeratainthor Aandavar Kuzhanthaigal Avaraavaar Neethikkaay Thunpuruvor Paeratainthor Neethi Vinnarasae Avar Ataivaar