பாடல் #41959
எளியவர்க்குச் சொந்தம்
🔤 Eliyavarkkuch Sondham
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எளியவர்க்குச் சொந்தம் இந்த உலகம் என்று - நம் இயேசு சொன்ன நல்ல காலம் வருமோ என்று? ஒளியிழந்து விளங்குதவர் வாழ்வு இன்று - அவர் உலகை என்று ஆள்வதோ தலை நிமிர்ந்து நின்று? இறைவனது இல்லமன்றோ இந்த உலகம் - அதில் எல்லோர்க்கும் உரிமையுடன் உண்டு இடம் அறைகளிலே கதவுகளோ எதுவுமில்லை - இங்கு அன்புடன் வாழ்ந்திருந்தால் மறையும் தொல்லை. உள்ளமெனும் சோலையிலே அன்பு மலர்ந்தால் - இந்த உலகத்திலே சம உரிமை மணம் கமழும் வெள்ள மென இறை அன்பு வழிந்தோடினால் - இங்கு வறியவர்கள் வாழ்வினிலே வலிமை வரும். தனி மனிதன் திருந்தி விட்டால் போதாது - இந்த தாரணியே முழுத்திருப்பம் பெற வேண்டும் இனிமேலே வரும் என்று இருந்திடாதே - இன்றே எளியவர்கள் உணர்வூக்கம் பெற வேண்டும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eliyavarkkuch Sondham Indha Ulakam Enru - Nam Yesu Sonna Nalla Kaalam Varumo Enru? Oliyizhanthu Vilangkudhavar Vaazhvu Inru - Avar Ulakai Enru Aalvatho Thalai Nimirnthu Ninru? Iraivanathu Illamanro Indha Ulakam - Athil Ellorkkum Urimaiyudan Untu Idam Araigalilae Kathavugalo Ethuvumillai - Ingku Anpudan Vaazhnthirunthaal Maraiyum Thollai. Ullamenum Solaiyilae Anpu Malarnthaal - Indha Ulakatthilae Sama Urimai Manam Kamazhum Vella Mena Irai Anpu Vazhinthotinaal - Ingku Variyavarkal Vaazhvinilae Valimai Varum. Thani Manidhan Thirunthi Vittaal Pothaathu - Indha Thaaraniyae Muzhutthiruppam Pera Vaentum Inimaelae Varum Enru Irunthitaathae - Inrae Eliyavarkal Unarvookkam Pera Vaentum.