பாடல் #41958
எனக்குப் பிறன் யார் என்றே
🔤 Enakkup Piran Yaar Enrae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்குப் பிறன் யார் என்றே ஏசுவிடம் நான் கேட்டேன் என்னையே நல்ல பிறனாக இருந்திட அவர் சொன்னார் கள்ளர் கையில் அகப்பட்ட மனிதர் உள்ளம் நைந்து உழன்றிடும் மனிதர் கொள்ளை அடித்து உயர்ந்திடும் மனிதர் அத்தனை பேருக்கும் நான் தான் பிறனே குறைவு கண்டு குலைந்திடும் மனிதர் சிறையில் வாழ்ந்து சோர்ந்திடும் மனிதர் நிறைவில் பிறரை மறந்திடும் மனிதர் அத்தனை பேருக்கும் நான் தான் பிறனே இல்லம் ஏதும் இல்லா மனிதர் நல்லோர் நட்பைத் தெரிந்திடா மனிதர் இல்லோர் நாமென்றிருந்திடும் மனிதர் அத்தனை பேருக்கும் நான் தான் பிறனே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkup Piran Yaar Enrae Aesuvidam Naan Kaettaen Ennaiyae Nalla Piranaaga Irunthida Avar Sonnaar Kallar Kaiyil Agappatta Manidhar Ullam Nainthu Uzhanritum Manidhar Kollai Atitthu Uyarnthitum Manidhar Atthanai Paerukkum Naan Thaan Piranae Kuraivu Kantu Kulainthitum Manidhar Siraiyil Vaazhnthu Sornthitum Manidhar Niraivil Pirarai Maranthitum Manidhar Atthanai Paerukkum Naan Thaan Piranae Illam Aethum Illaa Manidhar Nallor Natpaith Therinthitaa Manidhar Illor Naamenrirunthitum Manidhar Atthanai Paerukkum Naan Thaan Piranae.