பாடல் #41953
வருக வருக வருக வருக
🔤 Varuga Varuga Varuga Varuga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருக வருக வருக வருக வருக வருக வருகவே வையமெங்கும் மெய்யிலங்க வானரசு வருகவே பெருக பெருக பெருக பெருக பெருக பெருக பெருகவே பெருமை பேய்மை நீங்க அன்பு தூய்மைநீதி பெருகவே ஆதி அன்பு குன்றும் சபைகள் மவர்ந்தெழுந்து வளரவே ஆவி ஆற்றல் ஊழியரில் அதிகமாகப் பெருகவே நீதி வாழ்வில் நின்று இறை அன்பைச் சான்றுபகரவே நேசர் இயேசு பாதம் நல்கும் இறையியலும் பெருகவே. சாதி பேதம் லஞ்ச ஊழல் சமூகமதில் ஒழியவே சாவு நோவு காயம் ஏழ்மை உயர்வு - தாழ்வு அழியவே நீதி நியாயம் யாவருக்கும் ஒன்றுபோல நிலவவே நேர்மையில்லா ஆளுகைகள் நாட்டினின்று அகலவே. தீய ஒழுகல் தீய பழகல் மூட எண்ணம் குறையவே தீமை உந்தும் சந்தடிகள் காட்சிகளும் மறையவே தூய ஆவி இல்லமாக உள்ளமுடல் உய்யவே தூய வாழ்வின் சின்னமாக இயேசுராசு வருகவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varuga Varuga Varuga Varuga Varuga Varuga Varugavae Vaiyamengkum Meyyilangga Vaanarasu Varugavae Peruga Peruga Peruga Peruga Peruga Peruga Perugavae Perumai Paeymai Neengga Anpu Thooymaineethi Perugavae Aathi Anpu Kunrum Sapaigal Mavarnthezhunthu Valaravae Aavi Aartral Oozhiyaril Athigamaagap Perugavae Neethi Vaazhvil Ninru Irai Anpaich Saanrubakaravae Naesar Yesu Paadham Nalkum Iraiyiyalum Perugavae. Saathi Paedham Lanjja Oozhal Samoogamathil Ozhiyavae Saavu Novu Kaayam Aezhmai Uyarvu - Thaazhvu Azhiyavae Neethi Niyaayam Yaavarukkum Onrupola Nilavavae Naermaiyillaa Aalukaigal Naattininru Agalavae. Theeya Ozhugal Theeya Pazhakal Mooda Ennam Kuraiyavae Theemai Unthum Sandhatigal Kaatsigalum Maraiyavae Thooya Aavi Illamaaga Ullamudal Uyyavae Thooya Vaazhvin Sinnamaaga Yesuraasu Varugavae.