பாடல் #41951
நதியுண்டு நதியுண்டு நமக்கு தெய்வ
🔤 Nathiyuntu Nathiyuntu Namakku Theyva
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நதியுண்டு நதியுண்டு நமக்கு - தெய்வ நதியுண்டு கிருபையாம் நதியுண்டு - நமக்கு பயப்படோம் எவருக்கும் எங்கும் - மலை வியப்பான விபத்துக்கள் விரைந்திட்ட போதும் புயல்பூமி யதிர்ச்சியானாலும் - மலை உயரங்கள் சரிந்து மாசேதம் வந்தாலும். நதிநீரால் நிறைந்ததோர் நதியாம் - சேனா பதிவாழும் நகரதை மகிழ்விக்கும் நதியாம் சுதியற்றோர் கரைசேர்க்கும் நதியாம் - சுய மதியற்றோர் தெளிவுற்றுத் துதிபாடும் நதியாம். ஜீவத் தண்ணீருள்ள நதியே - அது தேவ சமாதானப் பேரின்ப நதியே பாதகர் முழுகிடும் நதியே - பல பேதைகள் சுமைதாங்கும் நீர்வற்றா நதியே இயேசுவே நமக்கந்த நதியாம் - அவர் நேசமே எவருக்கும் மோட்சம்சேர் கதியாம் வாசம் செய்வோம் நதியோரம் - பாவ நீசராம் நமக்கென்றும் அவர்கிருபா நதியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nathiyuntu Nathiyuntu Namakku - Theyva Nathiyuntu Kirupaiyaam Nathiyuntu - Namakku Payappatom Evarukkum Engkum - Malai Viyappaana Vibatthukkal Virainthitta Pothum Puyalpoomi Yathirchsiyaanaalum - Malai Uyaranggal Sarinthu Maasaedham Vanthaalum. Nathineeraal Niraindhathor Nathiyaam - Saenaa Pathivaazhum Nakarathai Makizhvikkum Nathiyaam Suthiyarror Karaisaerkkum Nathiyaam - Suya Mathiyarror Thelivurruth Thuthipaatum Nathiyaam. Jeevath Thanneerulla Nathiyae - Athu Thaeva Samaathaanap Paerinba Nathiyae Paadhakar Muzhukitum Nathiyae - Pala Paethaigal Sumaithaangkum Neervarraa Nathiyae Yesuvae Namakkandha Nathiyaam - Avar Naesamae Evarukkum Motsamsaer Kathiyaam Vaasam Seyvom Nathiyoram - Paava Neesaraam Namakkenrum Avarkirupaa Nathiyae