பாடல் #41950
அடைக்கலம் ஆண்டவரே
🔤 Ataikkalam Aandavarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அடைக்கலம் ஆண்டவரே - எங்கள் அடைக்கலம் வேறில்லையே - எம்மை படைத்துக் காத்து மீட்டுக் கொண்டவர் பரம பிதா நீரே பரம சுதந்திரமே, எங்கள் பாத்திரத்தின் பாகமே - உன்றன் கரமே அருளும் வரமே கர்த்தாநின் கிருபையின் மாசெல்வமே - அடைக் ஆலோசனைக் கர்த்தரே எங்கள் ஆவியான தூயரே - இந்த பூலோகத்தில் போதம் அளித்திடும் புனித சகாயர் நீரே - அடைக் ஆறுதல் அளிப்பவரே உம்மை அண்டிப்பிழைப்போர் எமை - சதா ஆற்றித் தேற்றி மாற்றி ஆட்கொண்டவர் மாறாத பூரணரே - அடைக் ஆனந்தம் ஆண்டவரே, அருளானந்தப் பேரின்பமே - சன்னி தானமதிலே அழகாய் விளங்குமாப் பூரண ஆனந்தமே - அடைக்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ataikkalam Aandavarae - Enggal Ataikkalam Vaerillaiyae - Emmai Pataitthuk Kaatthu Meettuk Kondavar Parama Pithaa Neerae Parama Sudhanthiramae, Enggal Paatthiratthin Paagamae - Undran Karamae Arulum Varamae Kartthaanin Kirupaiyin Maaselvamae - Ataik Aalosanaik Karttharae Enggal Aaviyaana Thooyarae - Indha Poologatthil Podham Alitthitum Punidha Sakaayar Neerae - Ataik Aarudhal Alippavarae Ummai Antippizhaippor Emai - Sathaa Aarrith Thaerri Maarri Aatkondavar Maaraadha Pooranarae - Ataik Aanandham Aandavarae, Arulaanandhap Paerinbamae - Sanni Thaanamathilae Azhakaay Vilangkumaap Poorana Aanandhamae - Ataik